சோம்பேறித்தனத்தை உடைப்பது எப்படி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் உங்கள் இலக்குகளை அடைவதற்கும் குறிப்புகள்

0



 

சோம்பல் என்பது பலரை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். மேலும் அது அவர்களின் ஒட்டுமொத்த நல வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

 சோம்பேறித்தனம் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளையும் அதை சமாளிப்பதற்கு சில குறிப்புகளையும் இங்கே காண்போம் .

சோம்பலின் காரணங்கள் 



சோம்பல் பல்வேறு காரணங்களை கொண்டு இருக்கிறது.  தெளிவான குறிக்கோள் அல்லது நோக்கம் இல்லாத போது அதை செய்வதற்கான உந்துதலை கண்டறிவது சவாலாக இருக்கிறது.


 தோல்வி பயம் சமயங்களில் நாம் தோல்வியுற்று விடுவோமோ அல்லது தவறு செய்து விடுவோமோ என்று பயந்து சில முடிவுகளை எடுக்க பயப்படுகிறோம்.

 தள்ளிப் போடுதல்

கடைசி நிமிடம் வரை பள்ளிக்கு கிளம்புவது அல்லது பஸ் ஸ்டாப்பிற்கு செல்லும் போது கூட கடைசி நிமிடத்தில் சிலபேர் செல்வார்கள்.

 தள்ளிப் போடுதல் என்பது மிகப்பெரிய ஒரு கெட்ட பழக்கம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் தள்ளிப் போட்டால் பரவாயில்லை ஆனால் ஒரு நாள் இன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை நாளைக்கு என்று தள்ளிப் போடுவது எல்லாம் மிகப்பெரிய சோம்பேறித்தனமாகத்தான் இருக்கும்.

 மனச்சோர்வு 

ஒரு விஷயத்தை செய்யணும் என்று நினைக்கும் போது அதை செய்ய விடாமல் மன சோர்வடையும்.நாம் நினைப்பதை நாமே செய்யவில்லை என்றால் யாரால் செய்ய முடியும்.

 சோம்பலின் எதிர்மறை விளைவுகள் சோம்பேறித்தனம் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

 நான் சோம்பேறியாக இருக்கும்போது காரியங்களை தள்ளி போடுகிறோம் அல்லது தவிர்க்கிறோம் இதனால் உற்பத்தி திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது.

 மன அழுத்தம் சில சமயங்களில் அதிகமாக ஏற்படுகிறது ஆரோக்கியம் கெடுகிறது இது உடல் பருமன் இதய நோய் போன்ற உடல் நல ஏற்படுத்துகிறது.

 சுயமரியாதை குறைகிறது நான் நமது இலக்குகளை அடையாத போது அதனால சுயமரியாதை குறைவதற்கு வழிவகுக்கிறது.


 சோம்பேறித்தனத்தை போக்க சில குறிப்புகள் 



சிறிய இலக்குகளை அமைத்துக் கொள்ளவும் அடையக்கூடிய சிறிய  திட்டத்தை உருவாக்கலாம் 

சில சமயம் நாம் வாக்கிங் போகணும் என்று நினைப்போம் ஆனால் அது நடக்காது.

 அந்த நேரங்களில் இன்று ஒரு ஐந்து நிமிடம் நடக்கணும் என்று நினைத்தால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து,பயிற்சி செய்து நம் இலக்குகளை அடையலாம்,பணிகளையும் சிறிய படிகளாக செய்ய வேண்டும்.

 


வீட்டில் ஒட்டு மொத்த வேலையும் ஒரே நேரத்தில் செய்யாமல் சிறிய சிறிய பகுதியாக பிரித்து இந்த நேரத்தில் இந்த பணியை செய்து முடிப்போம் என்று நமக்குள்ளாகவே ஒரு நிலையை வகுத்துக் கொண்டு செய்தால் கண்டிப்பாக பெரிய பணியை கூட ஈசியாக முடிக்க முடியும் ஒரு வழக்கத்தை உருவாக்க வேண்டும்

 எல்லாமே நம் அன்றாட வாழ்க்கையில் பழக்க வழக்கம் தான் ஒரு சின்ன விஷயத்தை கூட நாம் தினமும் செய்ய பழகினால் அது நம் பழக்கமாக ஆகிவிடும்

வேலை செய்வதற்கு என்று கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் ஓய்வு எடுப்பதற்கான நேரம் என்று நேரத்தை ஒதுக்கி வைத்து வேலை செய்தால் கண்டிப்பாக அது ஒரு பழக்கத்துக்குள் வரும்.

 சமூக ஊடகங்கள் டிவி போன் போன்ற கவனசிதறல்கள் ஏற்படும் போது நம்முடைய வேலை அதிகமாக செய்ய முடியாமல் போகும் இதை குறைப்பதன் மூலமாக நாம் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யலாம்

 நேர்மறையாக சுய பேச்சு பேச பழக வேண்டும் நம்மை நாமே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும் பரவாயில்லை என்று இந்த வேலையை நான் செய்ய முடிந்தது என்று நமக்கு நாமே சபாஷ் சொல்லிக்கிட வேண்டும்

 சில நேரங்களில் நாமே வெகுமதி கொடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு பணியை முடித்த பிறகு மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஏதேனும் ஒரு பிடித்த உணவையோ அல்லது ஒரு இனிமையான உங்களுக்குப் பிடித்த பாட்டு கேட்கும்போது மிகவும் சந்தோஷமான மனநிலைக்கு வரலாம்.

முடிவில் சோம்பல் என்பது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் ஒட்டுமொத்த நல வாழ்வில் ஆரோக்கியத்தை கெடுக்கும் எனவே அதே சமாளிப்பதற்கான வழிகளை தெரிந்து கொண்டு நிறைவான நிம்மதியான இலக்குகளை அமைத்து வாழ்க்கை வாழ்வதற்கு நாம் ஒரு படியை எடுத்து வைக்க வேண்டும் வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)