நான் சிறுவயதில் இருந்தே கடவுளைத் தேடி என் பயணம் தொடர்ந்து வந்தது. சிறுவயதில் இந்துவாக தான் பிறந்தேன் ஆனால் இந்து மதத்தில் இருந்த பல குழப்பமான தத்துவங்களும் நம்பிக்கைகளும் என் மனதுக்கு ஒத்து வராத காரணத்தினால் மத சடங்குகளின் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை.
பள்ளியில் கிறிஸ்டின் மதத்தைப் பற்றி சொன்னபோது மனதிற்கு பிடித்தது அந்த நன்னம்பிக்கையில் பள்ளி படிப்பை முடித்தேன். நான் ஒரு முஸ்லிம் ஊரில் பிறந்ததால் தமிழில் திருக்குர்ஆனை படித்தேன் . குர்ஆன், பைபிளின் பழைய ஏற்பாடோடு ஒத்து இருந்தது, கிறிஸ்துவத்திற்கு அடுத்ததாக வந்த மதம் என்று தோன்றியது.
சிறுவயதிலேயே திருமணம் முடிந்ததால் இந்து மத சடங்குகளை பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது இருந்தது. திருமணத்தில் பல்வேறு பிரச்சினைகளை கையாள தெரியாமல் கடவுள் இல்லை என்று கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒவ்வொரு இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும்போது கடவுள் இருக்கிறாரா? என்று அப்பொழுது எழும். பின் ஏதோ ஒரு சக்தி இருந்தால் அது ஏன் இந்த மக்களை காப்பாற்ற மாட்டேன் என்கிறது என்று நம்பிக்கை இல்லாமல் போகும்.
பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது, ஏழை மக்களை பார்க்கும்போது, மன உளைச்சலில் இருக்கும் பொழுது, தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் போதும் இந்த மக்களை எல்லாம் பார்க்கும்போது கடவுள் என்பவர் ஒருவர் இருக்கிறாரா என்று தோன்றியது.
இப்படியே சென்று கொண்டு இருந்த என் வாழ்க்கை குடிபிரச்சனையிலிருந்து மீள முடியாததால் அதற்கான தீர்வு ஏதேனும் இருக்கிறதா என்று யூட்யூபில் தேடினேன். அப்பொழுது ஹீலர் பாஸ்கர் சொன்ன விளக்கம் எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இயற்கை சக்திகளை எப்படி பயன்படுத்துவது, தன்னைத்தானே நோயில்லாமல் எப்படி காப்பாற்றிக்கொள்வது நம் உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் கொஞ்சம் புரிய முடிந்தது.
அப்பொழுது என்ன முடிவுக்கு நான் வந்தேன் என்றால் இந்த உலகத்தில் வேறு எங்கேயும் கடவுள்இல்லை நம்மிடத்தில் தான் இருக்கிறார் என்று இந்தத் தெளிவு ஏற்பட்டாலும் கூட மனதில் நிம்மதி வரவில்லை. அவரே ஒரு வீடியோவில் ஏ ஏ ஆல்கஹாலிக் அனானிமஸ் அமைப்பைப் பற்றியும், அதில் பெண்களுக்கு ஆல் அனான் என்ற ஒரு அமைப்பும் இருக்கிறது என்று கூறினார்
அந்த நம்பரில் தொடர்பு கொண்டு அந்த அமைப்பில் நானும் சேர்ந்து கொண்டேன் ஒரு இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை அது முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. .இப்படியே வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கினேன் இருந்தாலும் என் மனம் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை,
நாம் செய்வது சரியா தவறா? அன்று முடிவெடுக்க முடியாமலும், செய்துவிட்டு அப்படி தவறாக செய்து விட்டோமே என்று மணம் குற்ற உணர்ச்சியில் இருக்கும். இப்படி இந்த மனதை பற்றி புரிய முடியவில்லையே என்று பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன்.
எனக்கு மிகச் சிறந்த தீர்வாக அக்கு ஹீலர் உமர் பாரூக் என்பவரது வீடியோவை யூட்யூபில் பார்த்தேன் அதில் அவர் மனம் செயல்படும் விதத்தையும் அதையே அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறியது கொஞ்சம் மனதை பற்றி புரிய முடிந்தது.
அவர் மனம் பற்றி அறிய காரணமான ஸ்ரீ பகவத் அய்யா பற்றி கூறினார் யார் இந்த பகவத்ஐயா? என்று என் மனம் தேடியது இன்னும் நான் யூட்யூபில் தேடியபோது பகவத் பாதை என்கிற சேனலில் மிகவும் தெளிவாக அவர் கூறியதை கேட்கும் போது என் மனதிற்கு கொஞ்சம் திருப்பியும் நிம்மதியும் கிடைத்தது
ஆனால் இப்படி ஒருவர் சொல்கிறார் என்பதை நாம் எல்லோரும் அறியாமல் இருந்து இருக்கிறோம். அது எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் எழுதுகிறேன் ஏனென்றால் இன்று எல்லோரும் மன அழுத்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மனதோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.என் மனதிற்குஒரு தீர்வு கிடைத்த மாதிரி இருந்தது.
மனம் என்பது நீரோட்டம் போல போகவேண்டும் அதை அடக்க முடியாது அதனுடன் போராட முடியாது என்று, மிகத் தெளிவாக இவரை விட யாரும் தெளிவாக சொன்ன மாதிரி தெரியவில்லை என் மனம் இப்போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறது அகத்தில் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை புறத்தில் தான் செய்ய வேண்டியதிருக்கிறது, என்று சொல்லிய விதமும் கடவுளைப் பற்றி அறிய வைத்த விதமும் மிகவும் நன்றாகவும் புரியும் படியாக இருந்தது.
https://www.youtube.com/@BagavathPathai
புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை புரிய முடியாமல் இருந்தோம் ஆனால் மிகத் தெளிவாக பேசி புரியவைக்கிறார்.எல்லோரும் பயன் பெறுவோம் புரிந்து கொள்ளுவோம் .வாழ்க வளமுடன்.



.jpg)

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.