உன்னையே நீ நேசி.

0

 






இந்த உலகத்தில் என்னை  நேசிக்க--ஓர்

இனிய உறவு இல்லையே என்று ஏங்கும்

இதயமே--உன்னையே நீ நேசி.


கண்ணாடியில் ஒரு நாளைக்கு நூறு முறை

பார்க்கும் போதெல்லாம்,தலை கோதும்

போதெல்லாம் உன்னையே நீ நேசி.


தெருவில் நடக்கும் போது உன்னை நீ நேசித்தால்

நடை அழகாகும்,நிமிர்ந்து தைரியமாய் செல்வாய்

அந்த தைரியத்திற்காக உன்னை நேசி.


எத்தனையோ கவலைகள் இருந்தாலும் உனக்கு பிடித்த

ஓர் நல்ல பாட்டு கேட்டுப் பார்

அதில் லயிக்கையில் உன்னை நீ நேசி.



வேலைக்களுக்கு மத்தியில் அதை சிறிது நேரம்

ஒதுக்கி வைத்து, ஒரு கப் காபியை ருசித்து

சாப்பிடு. அந்த ரசனையில் உன்னையே நீ நேசி.


வேலைகள்  அதிகமாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக

செய்து வேலையை முடிக்கும்,நேரத்தை கையாளும்

விவேகத்திற்காக உன்னை நீ நேசி.


பெண்ணாய் பிறந்தது பாவம் என்று நொந்த போது

என் மகனின் ஆனந்த முத்தம், சிணுங்கல்,

 பிறவி பயனை பெற்றது போல் ஆனந்தம், அதற்காக உன்னை நீ நேசி.


அடுத்தவர்கள் சொல்லும் வார்த்தைகளால் 

நொந்து போகாமல் என்னைப் பற்றி எனக்குத் தெரியும் 

அந்த நேர்மையான உள்ளத்திற்காக  உன்னை நீ நேசி.


அவர்கள் மாதிரி என்னால் செய்ய முடியவில்லையே;

சம்பாதிக்க முடியவில்லையே ? என்று ஏங்காமல் கிடைத்ததை வைத்து

 சந்தோசப் படும் உள்ளத்திற்காக உன்னை நீ நேசி.


எனக்கு மனபதற்றம் ஏற்படும் போது, குளித்து, நல்ல உடை 

உடுத்திக் கொண்டு வெளியே சென்றால் நிறைய பேரிடமிருந்து 

 கிடைக்கும் சக்திக்காக  உன்னை நீ நேசி.


உனக்குள்  உன்னைத் தேடு,உன் திறமை உனக்கு வெளிப்படும்

உனக்கு எதன் மீ து  ஆசையோ அதைச் சுற்றியே உன் திறமை இருக்கும்.  

அதை கண்டுபிடித்து உன்னை நீ நேசி.


அடுத்தவர்களுக்கு ஒரு  கஷ்டம் என்றால் உன்னால் 

உதவ முடியுமென்றால் உதவு,உதவ முடியவில்லையென்றால்

அன்போடு பேசு,அதுவும் முடியவில்லையென்றால்அவர்களுக்காக 

இறைவனிடம் உதவி கேட்கும் உள்ளத்திற்காக உன்னையே நீ நேசி. 




கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)