மகிழ்ச்சியாக இருப்பதற்கு பயிற்சியும், முயற்சியும் .

0

 


மகிழ்ச்சியாக இருப்பது என்பது கூட நேரடியாக உடனடியாக நடந்து விடுவதல்ல. அதைப் பழக்கப் படுத்துவதற்கு தேவையான பயிற்சியும், தொடர் முயற்சியும் தேவைப்படுகிறது.

மகிழ்ச்சியாக இருப்பதற்காக சில பயிற்சிகளை பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.

1.முதலாவதாக நன்றி தெரிவிக்க வேண்டியவர்கள் யார் என்று பட்டியல் செய்து அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். காலை எழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய நாளை நன்றி உணர்வோடு தொடங்கினால் மிக நல்ல நாளாக அமையும்.


2,இரண்டாவதாக ஒவ்வொரு இரவும் நேரத்தோடு தூங்குகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .அதிகமான நேரம் தூங்குவது மனஅழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கும்.


3.மூன்றாவதாக படிக்கிற மாணவர்கள் ஆனாலும், வீட்டிலுள்ள பெரியவர்கள் ஆனாலும் காலையில் எழுந்தவுடன் பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது மிகப்பெரிய வேலையாக செய்யக்கூடாது, நம் மூச்சுக் காற்றை நாம் கவனித்தால் அதுவே மிகப்பெரிய தியானம். உங்களுக்குப் பிடித்த இறைவனின் பாடலை கேட்டுக்கொண்டு தியானம் மேற்கொள்ளலாம்.


4.நான்காவதாக குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அதிக நேரம் செலவிட வேண்டும். நமக்குப் பிடித்த உறவுகள், நண்பர்கள் இவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். நமது பண நெருக்கடிகள், குடும்ப பிரச்சனைகள் பேசி சுமுகமாக தீர்வு காணலாம். அதற்கு நாம் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.


5.ஐந்தாவதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் செலவழிக்காமல் உண்மையான உறவுகளோடு அதிக நேரம் செலவழியுங்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் மூழ்கி நம் நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்காமல் சிறிது நேரம் செலவழித்து விட்டு, மற்ற நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவது, அவர்களோடு உணவு அருந்துவது போன்ற செயல்களை செய்யும்போது மன மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த ஐந்து பயிற்சிகளை முடிந்தவரை தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.  வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)