அம்மா ஜெயலலிதா, அம்மாவின் நினைவலைகள்.

0

 அம்மா ஜெயலலிதா அம்மா


வெற்றியை பெயரிலேயே கொண்டவளே;

நீ தொட்டதெல்லாம் ஜெயமே,

சிறு வயதிலேயே தகப்பனை பறிகொடுத்தவளே,

தாயின் பாசத்திற்கு ஏங்கியவளே,


படிப்பில் சுட்டி ஆனாலும்

பட்டப்படிப்பு படிக்க முடியாமல்

நடிக்க வந்தவளே,


நான் ஒன்று நினைத்தேன்

ஆனால் வாழ்க்கை வேற மாதிரி 

 போகிறது என்று சொன்னவளே,


நீங்கள் படிக்க நினைத்ததோ சட்டம்

ஆனால் அந்த சட்டத்தையே மாற்றி

அமைக்க முதலமைச்சர் ஆனாய்.


நீ பெண்ணா இருந்ததனால்

உன்னை ஓரம்கட்ட நினைத்தவர்களை

எல்லாம் ஜெயம் கொண்ட வெற்றி நாயகி- நீ.


எனக்கென்று தனி குடும்பம் வேண்டாம் என்று

தமிழ் நாட்டு மக்களையே பிள்ளைகளாய் நினைத்த

தன்னிகரில்லா தாயாய் ஆனாய்.


எம்ஜிஆர் தந்தார், பள்ளி குழந்தைகளுக்கு 

 மதிய சாப்பாடு-ஆனால் நீயோ 

மூன்று வேளையும் தந்தாய் எல்லோருக்கும் 

மலிவு விலை சாப்பாடு. 



எங்கள் வயிற்று பசியை நீக்கிய அம்மா,

பெண்களுக்கு என்னவெல்லாம் செய்தாய்?

தொட்டிலிலே தொடங்கி, 

தொட்டில் குழந்தை திட்டம்.


பள்ளிக்குச் செல்ல புத்தகம் மட்டுமா?

பேக், செருப்பு. சைக்கிள், லேப்டாப் 

இன்னும் எத்தனையோ......


கல்யாண பெண்ணிற்கு தாலிக்குத் தங்கம்,

சீர், பணம் என்று பார்த்து பார்த்து செய்தவளே;

உன்னைப்போல செய்ய யாரால் முடியும்?

யோசிக்கவே முடியாது அம்மா.


இது மட்டுமா,  குழந்தை உண்டானால் 12000 ரூபாய்,

குழந்தைகளுக்கு தேவையானது எல்லாமே செய்தவளே,


உன்னைப் போல தாயே எங்கே போய் தேடுவது,

 தேடினாலும் கிடைக்காது.




உன் வட்ட முகம், உன் நெற்றியில் அந்த பொட்டு

அதன் மேல் ஒரு கோடு, உன் அழகான சிரிப்பு

உன் உதடு திறந்து பேசுகிற அந்த கம்பீரமான குரல்,

கனிவான பார்வை, குழந்தை தவழ்ந்து வருவது போன்ற உன் நடை

இதையெல்லாம் நாங்கள் எங்கே போய் பார்ப்பது,


தகப்பன் தவறி விட்டாலும்

 தாய் குடும்பத்தை கரை சேர்த்து விடுவாள் 

ஆனால் நீ போனதனால் எல்லாமே போய்விட்டது.

அதுவும் பெண் பிள்ளைகளுக்கு தாய் இல்லை 

என்றால் சொல்லவே முடியாது அந்த துயரத்தை.


மரணத்தில் கூட போராடிய தாயே

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து

கை அசைப்பீர்கள் என்று காத்திருந்த எங்களுக்கு

நீங்கள் காலமான செய்தி கேட்டு இதயமே நொறுங்கி விட்டது.


நீ இருக்கும் போதே உன்னை தெய்வ தாயாக

நினைத்த எங்களுக்கு எல்லாம்

நீ தெய்வம் ஆகிவிட்டாய்.


நீங்கள் வாழ்ந்த காலத்தில்

நாங்களும் உங்களைப் பார்த்து வளர்ந்தோம் என்ற பெருமையில்

கணத்த இதயத்தோடு வாழ்கிறோம் அம்மா.


உன் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி 

பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறது அரசு.


இறந்த நாளான


டிசம்பர் 5ஆம் தேதி பெண்கள் மட்டுமல்ல ,

அத்தனை ஆண்களும் கண்ணீர் மல்க நினைவு கூறுகிறோம்,

 இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவு மறையாது.

இந்நாளில் உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)