ஒப்பேற்றுதல்

0

 







இது ஒரு தமிழ் வழக்குச் சொல். ஒப்பேற்றுதல் பிறருக்கு ஏற்றபடி வாழ முடியாமல், ஒத்துப்போக முடியாத நிலையில் இருப்பவர்கள். தங்கள் நிலைமை வெளியே தெரியாதபடி தாமும் நன்றாக வாழ்வது போல காட்டிக் கொள்வதற்கு ஒப்பேற்றுதல் என்று பெயர்.

  இப்படி ஒப்பேற்றி காலத்தை தள்ளிட்டு இப்படி வாழ்ந்தால் காலம் சரியாகிவிடும் என நம்பிக்கையோடு இருப்பார். பல நேரங்களில் பல பெண்களின் வாழ்க்கை இப்படி தான் ஒப்பேற்றி,  கடந்து போகிறது.

ஒப்பேற்றதலுக்கு ஏமாற்றுதல் என்று ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். கணவனின் சம்பளம் குறைவாக இருந்தாலும் பிறந்த வீட்டில், தன்னை ராணியாக வைத்திருப்பதாக கூறி நடிப்பார்கள்.

குழந்தைகளிடம் அப்பாவைப் பற்றி நல்ல விதமாக சொல்லி ஏமாற்றுவார்கள்.  குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றாலும் அப்பாவிடம் காசு வந்தவுடன் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள்.

பழகிய சொந்தங்களிடம் நிறைய வசதிகள் இருப்பதாக சொல்லி தன்னையே ஏமாற்றுவார்கள்.

பல நேரங்களில் இந்த ஒப்பேற்றுதல் குடும்பங்களில் அமைதியைத்  தான் உண்டாக்குகிறது.

 ஆனால் இன்றைய பெண்களிடம் இந்த குணம் குறைந்து வருகிறது. இன்றைய பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறியதால் சுயமரியாதையை எதிர்பார்க்கிறார்கள் .

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)