
ஆறு பெண் பிள்ளைகளையும் கடைசியாக ஒரு ஆண் மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு தாய். தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற வைராக்கத்திற்காகவே இத்தனை பிள்ளைகளையும் பெற்றெடுத்தாள் தன் தகப்பனுக்கு ஒரே செல்ல மகளாய் பிறந்தவள் தன் அப்பாவிற்காக கணவன் வீட்டில் அதிக வசதி இல்லை என்றாலும் அப்பா கூடவே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
கணவரும் அதிக சம்பாத்தியம் இல்லாததால் அவருடைய குடும்பத்தில் அவர் கடைசிப் பிள்ளை என்பதால் அம்மா அப்பாவும் இல்லை மாமனார் வீட்டோடு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது அவரவர் சூழ்நிலை தான் காரணம்.
இந்த ஆறு பெண் பிள்ளைகளையும் தன் தந்தையின் உதவியோடு படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பதற்குள் இருக்கிற சொத்துக்களை எல்லாம் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
என்ன செய்வது வரதட்சனை கொடுக்காமல் பெண்ணை கட்டிக் கொள்வேன் என்று எந்த ஆண் மகனும் சொல்ல தயாராக இல்லை இந்த சமுதாயமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை
தனி மனிதன் மாறினால் சமுதாயம் மாறும் என்னதான் படித்திருந்தாலும் மற்றவர்களைப் பார்த்து நாமும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறோம். இப்படி கஷ்டப்பட்டு குடி இருக்கிற வீடு விற்று ஆறு ஆறு பெண் பிள்ளைகளையும் கல்யாணம் முடித்து அவர்களுக்கு பேறுகாலம் பார்த்து முடிப்பதற்குள் வாழ்க்கையே பெரும் போர்க்களமாக இருந்தது
இத்தனையும் சமாளித்து தன் சுகர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிற தன் கணவனையும் பாதுகாத்து அவருக்கும் பணிவிடைகள் செய்து அவருடைய ஆசைகளையும் நிறைவேற்றி சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய சம்பாத்தியம் இல்லாத கணவனிடம் அவருக்காக ஆஸ்பத்திரியில் பல வருடங்கள் செலவழித்து அவருக்காகவே பல நாட்களை காலங்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்
சிறுவயதிலிருந்தே தன் தகப்பனுக்காக தன் சொந்த தாயை விட்டு பிரிந்து இரண்டாவது தாயிடம் பல கஷ்டங்களையும் பட்டு தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்காக ஒரே நேரத்தில் நிறைய சமையல் செய்து அடுப்பில் சமையல் செய்ததால் தொண்டையில் தீராத வலி ஒரு இட்லி சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஆகும் இத்தனையும் வைத்துக்கொண்டு அத்தனை கடமைகளையும் ஒழுங்காக செய்த தாய்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தில் மாமனார் மாமியார் இறந்து விட்டால் அதற்கான சீர்வரிசை கட்டுக்கள் எல்லாவற்றையும் செய்து தன்னுடைய செலவை சுருக்கிக் கொண்டு தன் பிள்ளைகள் தன் பேரப்பிள்ளைகள் என்று அவர்களுக்காக காசையும் சேர்த்து வைத்து இன்று வரை யாரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ்ந்து வரும் ஒரு தாய்
சொந்த வீட்டை விற்று விட்டதால் தன் மகனுக்கும் ஒரு இடம் வேண்டும் என்று ஒரு வீடு கட்ட முடியவில்லை என்றாலும் ஒரு இடத்தை வாங்கி போட்டு இருக்கிறார்கள் பெரிதாக தன் கணவனிடமும் எதையும் எதிர்பார்க்காமல், நான் பிள்ளைகளைப் பெற்றேன் அதற்காக நான் என் தந்தை தந்த சொத்தை விற்று என் பிள்ளைகளை நல்ல இடத்தில் கட்டி வைக்கிறேன் என்று இருந்தார்கள் இப்பொழுது ஆண் பிள்ளையையும் திருமணம் முடித்த ஆகிவிட்டது.
அந்தப் பையனும் பெரிதாக ஒன்றும் தாய்க்கு செய்து விடவில்லை இருந்தாலும் இந்தத் தாயைப் பார்த்து எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிற பிள்ளைகளாக தான் பல பேர் இருக்கிறார்கள
இதில் தாயை குறை சொல்வதா பிள்ளையை குறை சொல்வதாய் என்று தெரியவில்லை சிறுவயதிலே பெற்றோருக்கு செய்ய வேண்டியது உன்னுடைய கடமை என்று சொல்லி வளர்க்காமல் விட்டது தவறு
என்னுடைய கடமை பெண் பிள்ளைகளை படிக்க வைத்து ஏதோ தன்னால் முடிந்ததை செய்து கல்யாணம் முடித்து வைப்பது ஆண் பிள்ளைக்கு கொஞ்சோண்டு இடம் பூர்வீக சொத்து படிக்க வைக்க செலவு திருமணம் இது எல்லாம் செய்து விட்டார்கள் இந்தப் பிள்ளை கேட்கிறது நீங்கள் என்ன எனக்கு என்ன செய்து விட்டீர்கள் என்று.
பிள்ளைகள் தான் தாய்க்கு செய்ய வேண்டும் தாயிடம் இருந்து எதிர்பார்ப்பது தப்பு. ஒருவன் தன் தாய்க்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறானோ அவன் அப்படிப்பட்ட மனிதன் தான் தன்னை நம்பி வந்த மனைவியையும் மரியாதையோடு நடத்துவான் எனவே பிள்ளைகளே தாய் தகப்பனிடம் எதிர்பார்க்காதீர்கள் அவர்களுடைய கடமை உங்களை வளர்த்து விடுவது நீங்கள் தான் அவர்களுக்கு செய்ய வேண்டும் முடியாத காலத்தில் அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.