பேரன்பு

0

அன்பு எப்பொழுதுமே யாராவது நம்மிடம் காட்ட மாட்டார்களா ? நம்மீது அன்பு செய்ய மாட்டார்களா ? நமக்காக எல்லாவற்றையும் செய்வார்களா என்று ஒரு உறவு மற்றொரு உறவுவிடும் உறவிடம் எதிர்பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது அன்பு எப்பொழுதும் எதிர்பார்த்து பெறக் கூடியதா அல்லது தானாக வரக் கூடியதா?

 கணவன் மனைவிக்குள் எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது 
தாய் தன் குழந்தை இடமும் தகப்பன் தன் குழந்தை இடமும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது

 இன்றைய சமூகத்தில் காதல் என்கிற பெயரில் மிகவும் அன்பு மலிவானதாகவும் ஒரு வியாபார பொருளாகவும் மாறிவிட்டது 
வியாபாரப் பொருள் என்று நான் எப்படி கூறுகிறேன் என்றால் நீ அன்பு காட்டினால் நானும் அன்பு காட்டுவேன் நீ கோபத்தை காட்டினால் நானும் கோபத்தை தான் காட்டுவேன் என்கிற பாணியில் தான் இன்றைய அன்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது

 சக மனிதனின் மீதான அன்பு அக்கறை இல்லாத காரணத்தினால் தான் அடுத்தவர்களுடைய கஷ்டம்
வலியை புரிந்து கொள்ள முடியவில்லை

 அன்பு எப்பொழுதும் ஒரு சுயநலத்தை எதிர்பார்த்து தான் இருக்கிறது நம் மீது யாராவது அன்பு வைக்க மாட்டார்களா ? என்று ஏக்கத்தில் தான் இருக்கிறது அந்த ஏக்கம் சில சமயங்களில் கோபமாகவும் மாறுகிறது இது என்ன உலகம் யாருமே என் மீது அன்பு காட்ட மாட்டார்களே என்று தன் மீதான ஒரு சுய பச்சாதாபத்தையும் மற்றவர்கள் மீதான ஒரு கோபத்தையும் வெளிகாட்டுகிறது  
 உண்மையிலே அன்பு என்றால் என்ன?

 அன்பு என்பது பெறப்படுவது அல்ல அது கொடுக்கப்படுவது ஒருவர் நம் மீது தான் அன்பு வைக்க வேண்டியது இல்லை நாம் அவர்கள் மீது அன்பு வைக்கலாமே அவர்களுக்கு அன்பு காட்ட தெரியவில்லை என்று ஏங்குகின்ற மனதே நீ அந்த அன்பை எப்படி காட்டலாம் என்று நீங்கள் அவர்கள் மீது அன்பு காட்டுங்கள் அவர்கள் நம் மீது அன்பு வைக்கவில்லை என்றாலும் உங்கள் அன்பை முழுமையாக காட்டுங்கள்                    
 அது ஒரு நேரத்தில் அவர்களை நான் இத்தனை செய்தும் என் மீது அன்பு காட்டுகிறார்களே என்று அவர்களை ஒரு குற்ற  உணர்ச்சிக்குள்  கொண்டு வரும்
 குற்ற உணர்ச்சிக்குள்  வருவதற்காக அப்படியே செய்ய வேண்டியது இல்லை உங்களுடைய அன்பை முழுமையாக கட்டுங்கள் ஒருவர் நம் மீது எப்படி அன்பு காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதைப்போலவே அன்பு காட்டுங்கள் அந்த அன்பு நம் உள்ளத்தில் மட்டுமல்ல உடலிலும் மிகவும் பிரவாகமாக பொங்கியெழும் 
அது என்ன பிரவாகம் உங்கள் அன்பு அவர்களுக்கு திக்குமுக்காடு செய்து விடும் நாம் என்னதான் வெறுப்பு காட்டினாலும் அவர்கள் நம் மீது அன்பு காட்டுகிறார்கள் என்று அவர்களை நிலைகுலைய செய்து விடும்
 அது அவர்களுடைய கல்நெஞ்சியும் கரைத்து உங்கள் மீது பாசம் காட்டுவார்கள் உங்கள் பேரன்புக்கு முன்பாக எல்லாம் கரைந்து போகும் நன்றி வாழ்க.


வளமுடன்

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)