அனைத்து வீட்டு கழிவுகளுக்கும் ஒரே தீர்வு .அரசாங்கம் செயல்படுத்துமா?

0
 



நாங்கள் குலசேகரம் பட்டினத்தில் இருந்தபோது அங்கு தசரா மிகவும் விமரிசையாக நடைபெறும்
 ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் வருவதும் போவதுமாக ஊரே நன்றாக கலைக்கட்டும்
 ஆனால் தசரா முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஊரை தூய்மைப்படுத்த முடியாமல் மிகவும் திணறுவார்கள் தூய்மை பணியாளர்கள்



 அங்குள்ள மக்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் அவர்களுக்கு நோய்கள் பல ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அரசாங்கம் தூய்மைப்படுத்தி குப்பைகளை எல்லாம் அள்ளிக்கொண்டு செல்வார்கள்
 ஊருக்குள்ளே சுத்தப்படுத்துவார்கள் ஊருக்கு வெளியே சுத்தப்படுத்த முடியாமல் கண்ணாடிக் அவர்களும் பிளாஸ்டிக் பாட்டில்களும் அப்படியே கிடக்கும் ஒரே நேரத்தில் 12 லட்சம் மக்கள் வந்து செல்வதால் இதை தடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது
 அப்பொழுது என் மனதில் இந்த குப்பைகளை எப்படி அகற்றுவார்கள்
வேறு ஒரு இடத்தில் சேகரித்து போட்டு அதை எரிப்பதால் மிகவும் காற்று மாசுபடும்

 இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்து பல வருடங்கள் நான் தேடிக் கொண்டிருந்த போதுதான் மேக் இன்சினரேட்டர் என்கிற ஒரு புதிய வகை கண்டுபிடிப்பை யூடுபில் பார்த்தேன்



https://www.youtube.com/watch?v=hIttCCuBhi8


 இந்த திட்டத்தை பயன்படுத்தி நாள் மிகவும் நன்றாக இருக்குமே காற்று மாசுபடாது அதிலிருந்து அதன் கழிவுகளில் இருந்து அதன் சாம்பலில் இருந்து பேவர் பிளாக்  செங்கல் உருவாக்குகிறார்கள் என்பதை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்


 இதை நான் நிறைய பேரிடம் சொன்னேன் ஆனால் இது ஒரு தனி மனிதன் நினைத்து செய்யக்கூடிய செயல் அல்ல ஒரு அரசு நினைத்தால் தான் இதை செய்ய முடியும் என்று பலர் சொன்னார்கள்




 ஒரு வங்கி அதிகாரி இடம் கேட்ட பொழுது இதற்கு கவர்மெண்ட் பாதிக்கும் மேற்பட்ட தொகுதியை தொகையை மானியமாக தரும் அதில் நீங்கள் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்கள் 
தனி ஒரு பெண்ணாக என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை ஆனால் இதை செயல்படுத்த என்னால் முயன்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைய நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது


 இந்த கண்டுபிடிப்பு என்பது மிகவும் உபயோகமும் சமுதாய நலத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று இது சுயநலத்தோடு இல்லாமல் இந்த பூமியை எப்பொழுது எப்படி  மாசு படுத்தாமல் இந்த குப்பைகளை மாற்றி பயனுள்ள பொருளாகமாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்

 இந்த அறிவியல் கண்டுபிடிப்பை அரசாங்கம் உபயோகப்படுத்தினால் மிகப்பெரிய காற்று மாசிலிருந்து நாம் தப்பிக்கலாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல சுத்தமான காற்றை கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை 

நம் எதிர்கால  சந்ததியினருக்கு சொத்தை சேமிப்பது மட்டுமல்ல நல்ல பூமியை கொடுத்து சொல்ல வேண்டும் அவர்களும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்



எங்கள் ஊரில் குப்பைகளை கொண்டு ஆற்றில் தான் போடுவார்கள். அதனால் ஆற்றும் மாசுபடுகிறது குப்பைகளை அகற்ற முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டு வரும் போது மிகவும் மிகச்சிறந்த எல்லா கழிவுகளான தீர்வாக இந்தத் திட்டத்தை அரசு கையில் எடுத்தால் நம் ஆற்று நீரையும் சுத்தமாக்க முடியும்

 இதை நம்ம அரசாங்கம் செயல்படுத்தினால் மட்டும்தான் மிகப்பெரிய பலனை அடைய முடியும் என்று நம்புகிறேன் இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை  வெப்சைட் லிங்கில் சென்று பார்த்தால் உங்களுக்கு புரியும் அற்புதமான கண்டுபிடி கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)