மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட
வேண்டுமம்மா என்று கூறினார் கவிமணி.
மான் குட்டி போல துள்ளி திரிந்த இந்தகுழந்தை
என்ன பாவம் செய்த செய்ததோ?
புதுச்சேரி குழந்தை ஆர்த்தியின் வன்புணர்ச்சி மற்றும்
கொலைவழக்கில் சட்டம் எவ்வளவு நம்பகமானது?
குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு
மரணதண்டனை கிடைக்குமா?
இந்த பாலாய் போன மனித இனத்திற்குள் பிறந்ததால்
நெஞ்சம் பொறுக்கவில்லை இந்த
நிலை கெட்டமனிதரை நினைத்து விட்டால்
பெண்ணை வெளியே விளையாட விட்டால் பாவமா?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்
இந்த ஜகத்தை அழித்திடுவோம் என்றார் பாரதி
தனி ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை
என்றால் என்ன செய்வது?
யார் மீது குற்றம் சொல்வது?
போதைப் பொருளை சுலபமாக கிடைக்கச் செய்த அரசாங்கத்தின் மீதா
அதை கண்டுகொள்ளாமல் விட்ட அதிகாரிகளின் மீதா
எண்ண ஓட்டத்தில் நஞ்சை பாய்ச்சிய சமூக ஊடகத்தின் மீது மீதா?
பிஞ்சுகுழந்தையின்மீது வக்கிரமானஎண்ணத்தைஉருவாக்கியது எது?
சமூகத்தை குற்றம் சாட்டி விட்டு இதை கடந்து செல்ல முடியவில்லை
ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தாமல்
இதை சரி செய்ய முடியுமா?
உடலால் பலமுள்ள ஆண்களால் தான் இதை சரி செய்ய முடியும்.
ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது
உங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது
என்ற எண்ணம் வந்தால் மட்டும் போதும்.
பெண்ணை கவர்ச்சி பொருளாக பார்க்கின்ற
மனோபாவத்தை மாற்ற சிறுவயதிலிருந்தே
நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்
அவள் ஒரு விளையாட்டு பாவை அல்ல என்று.
எல்லா உணர்ச்சிகளும் கொண்ட
உன்னில் பாதி தான் அவள்என்கிற எண்ணம்
ஒவ்வொரு ஆணுக்கும் வந்தால்
பெண்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.