EL Nino அபாயம் இனி மேல் தான்
தமிழ்நாடு பெரு வெள்ளம் புயல்களும் அடுத்தடுத்து தாக்கத் தொடங்கியது ஒரு வெள்ளம் முடிந்ததும் அடுத்த ஒரு வெள்ளம் வந்தது இப்படி மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது எதனால் ?
பொதுவாகவே பருவமழைக் காலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வளிமண்டல சுழற்சி இது எல்லாமே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று .
தற்போது புவி வெப்பமடைகிறது அதன் காரணமாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு தீவிரமாக ஏற்படத் தொடங்குகிறது
இருந்தாலும் கூட இந்த ஆண்டு அந்த சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து இருக்கு அந்த வரிசையில் தான் சென்னை மற்றும் தென் தமிழகத்திலும் கூட குறுகிய நேரத்தில் அதிக கனம் மழை பெய்திருக்கிறது
இந்தியாவில் தீவிர கனமழை கொட்டுவது தொடர்பாக வல்லுநர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள் வழக்கத்திற்கு மாறாக பருவ காலம் உலகின் பல பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதனால் வெளியேறக் கூடிய அந்த கார்பன் விகிதம் அதிகரித்தது.
பூமியின் மேல்பகுதியில் அதிக வெப்பம் ஆகிறது இது அனைத்தும் சேர்ந்து தான் பூமி உடைய வெப்பம் கடல் வெப்பம் இரண்டுமே அதிகரித்திருக்கிறது
இது அனைவருக்கும் தெரியும் தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஜூனில் இருந்து செப்டம்பர் உடைய இறுதி வரைக்கும் தென்மேற்கு பருவமழை அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பரவலாக அதிக அளவில் மழை பொழியும்.
1997, 2018, 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோதும் பசுபிக் கடல் பரப்புடைய வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது ஏழு முதல் 24 மாதங்கள் வரைக்கும் தான் அதிகமாக இருக்கும்.
குறைந்த நேரத்தில் அதீத மழை திடீர் புயல் மாதிரியான பாதிப்புகளும் கூட ஏற்படலாம். எல்நினோ ஜூலை 2023 இல் இருந்தே நமக்கு இந்தியாவை பாதிக்கத் தொடங்கி இருக்கிறது. ரெட் கோட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது
உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டு இது 2030-ம் ஆண்டில் 1.5 இனிமேல் அதிகரிக்கும் என்று கூறுகிறது
நாம் இயற்கை பேரிடர்கள் மத்தியில் தான் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் தொடர்ந்து வெள்ளங்கள் புயல்கள் கண்டிப்பா ஏற்படும் கடலோரத்தை ஒட்டி இருக்கக்கூடிய சின்ன சின்ன கிராமங்கள் மொத்தமாக அழிந்து போவதற்கு வாய்ப்புகள் இருக்கும் பல கடற்கரைகள் காணாமல் போகும்
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்புஏற்பட்ட வந்த அந்த கடல் சார்ந்த வெள்ளம் எல்லா வருஷமும் ஏற்படும்.மோசமான காலநிலை தொடர்பான ஆபத்துகள் கண்டிப்பா ஏற்படும் அதிகமாக பரவும் வெப்பக்காற்று தாக்குதல்கள் அதிகரிக்கும் கடலில் தண்ணீர் அதிகரிக்கும் மின்னல் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும்.
தேவையான நடவடிக்கைகள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்குது அப்படின்னு சொன்னாலும் கூட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறக்கூடிய புகைமுதல் வாகனங்களில் இருந்து வெளியேறக் கூடிய முறை இது எல்லாமே ஒன்று சேர்ந்து பூமியை வெப்பம் ஆக்கியது.
எனவே நாம் மரம் வளர்ப்பது ஒன்றே இதற்கு தீர்வாகும் அன்று அப்துல் கலாம் அவர்கள் புவியின் வெப்பம் அடைவதால் மரம் வளர்க்க வேண்டும் என்றும் அதை நகைச்சுவை நடிகர் விவேக் மூலம் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்தார் அவர்கள் ரெண்டு பேரும் இல்லை என்றாலும் அவர்கள் என் கனவை நனவாக்கி நம் எதிர்கால சந்ததிக்காக பூமியை காப்பாற்றி கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
நாம் ஒவ்வொருவரும் இயற்கை வாழ்வுக்கு மாறினால் மட்டுமே இது சாத்தியம். இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களும் உரங்கள் ஆளும் பூச்சி மருந்துகளாலும் மண்ணை கெடுத்து விட்டீர்கள் எனவே இயற்கை வழிக்கு நாம் திரும்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று சொன்னார்கள்
ஆனால் நாம் அனல் மின்சாரம், அணு மின்சாரம். தண்ணீரில் இருந்து மின்சாரம் காற்றில் இருந்து மின்சாரம் மின்சாரம் தயாரிப்பதற்கு பூமியை வெப்பப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு இயற்கையோடு இயைந்து வாழ்வது அப்படி என்றால் என்ன என்று கூட நம்மளுக்கு தெரியாது ஏன் சூரியன்உதிக்கும் போது நாம் எழுந்து சூரியன் மறையும் போது நாம் ஓய்வெடுக்க சென்றாலே போதும் இரவை பகலாக்கி மின்சாரத்தை உருவாக்க பாடுபடும். இந்த உலகம் இயற்கையையும் பூமியையும் காப்பாற்ற ஏதேனும் ஒரு சிறு முயற்சியை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இயற்கை வாழ்வுக்கு திரும்புவோம் வளம் பெறுவோம் வாழ்க வளமுடன்.






படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.