நான் யார் என்று தேடித்தேடி நான் பல நாட்கள் அலைந்தேன்.பல மதங்களில் உள்ள கருத்துக்களை தத்துவங்களையும் புரிந்து கொண்டு நான் யார் என்று தேடிக் கொண்டிருந்தேன்.
நான் யார்?
எங்கிருந்து வந்தேன்?
எங்கே போகப்போகிறேன்?
என்ற பல கேள்விகள் என்னுள் இருந்தன இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு புத்தகம் வந்து இருக்கிறது அது ஸ்ரீ பகவத் ஐயா எழுதிய நான் யார் என்கிற புத்தகம்.
நான் என்பது நிலையானவன் அல்ல என்பதை புரிய வைத்தது.
நான் மாறிக்கொண்டே தான் இருக்கிறேன் என்பதை புரிய வைத்தது நான் முன்பு பேசியது போல இன்று என்னால் இருக்க முடிவதில்லை.
நான் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லோருமே இந்த மாற்றத்திற்கு தான் உள்ளாகிறோம். நான் நேற்று நான் வேற விதமாக இருந்திருக்கிறேன் இன்று நான் வேறு விதமாக இருக்கிறேன். அப்படி என்றால் நான் என்கிற ஒரு நிலை கிடையவே கிடையாது என்பதை புரிய வைத்தது
நாம் பல நேரங்களில் நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கு நானே முரண்பட்டு இருக்கிறேன் அதைத் தவறு என்பது எப்பொழுது புரிந்து இருக்கிறது தவறு என்பதை விட நான் அப்படிதான் இருக்கிறோம் என்பதையும் புரிய வைத்திருக்கிறது
இதை நான் சாதாரண மனிதர்களிடம் எப்படி புரிய வைப்பது என்று யோசித்தேன் நீங்கள் நேற்று சொன்னீர்களே அதன்போல் நடந்து கொள்ளவில்லையே என்று நான் கேள்வி கேட்டிருக்கிறேன்.மற்றவர்களிடம் நானும் நேற்று சொன்னபோது இன்று இருக்க முடிவதில்லை அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்று இருக்கிறது
நாம் பல நேரங்களில் நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கு நானே முரண்பட்டு இருக்கிறேன் அதைத் தவறு என்பது எப்பொழுது புரிந்து இருக்கிறது தவறு என்பதை விட நான் அப்படிதான் இருக்கிறோம் என்பதையும் புரிய வைத்திருக்கிறது
நாம் இருக்கும் மனநிலையை சரியானதுதான் என்கிற தெளிவும் வந்திருக்கிறது யாராவது உங்களிடம் வந்து நீங்கள் அன்று அப்படி சொன்னீர்கள் ஏன் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை என்று கேட்டால் ஆம் நான் அன்றைய மனநிலையில் அப்படி இருந்தேன் இன்று என் மனநிலை மாறிவிட்டது என்று சொல்லக்கூடிய தைரியமும் வந்திருக்கிறது.
நம் மனநிலை அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிய வைத்தது அதனால் நீங்கள் எல்லோரும் நான் யார் என்கிற ஸ்ரீ பகவத் அய்யா எழுதிய இந்த புத்தகத்தை படித்து தெளிவு பெற அன்புடன் அழைக்கிறேன். வாழ்க வளமுடன்.



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.