இஸ்ரேல் பாலஸ்தீன போர் எங்கோ ஒரு நாட்டில் கிடைக்கிறது என்று நாம் சும்மா இங்கிருந்து செய்தி சேனலில் பார்த்தால் மட்டும் போதாது.அங்கு மக்கள் படும் வேதனையை நினைத்து சிறிது நேரம் மனம் வேதனை படுகிறது பின் நம் வேலைகளை நாம் பார்க்க தொடங்கி விடுகிறோம். நாம் என்னதான் செய்ய முடியும்?
இது வேற இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் மட்டுமல்ல. அம்மதங்களுக்கு இடையே உள்ள போராகும் அவர்களுடைய மத தத்துவங்களை கையில் எடுத்துக் கொண்டு இது எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
மதத்திற்கும் இடத்திற்கும் எப்படி சம்பந்தப்படுத்துகிறார்கள் அவர்கள் கடவுள் அவர்களுக்கு இதுதான் போதித்தார்களா? கடவுள் என்பவர் ஒரு இடத்திற்குள் அடைத்து வைக்கப்படுகிறவர் அல்ல, மொத்த உலகத்திற்கும் பொதுவானவர் இல்லையா அவர் இந்த பிரபஞ்சத்திற்கு சொந்தமானவர் அல்லவா ?அவரை எப்படி ஒரு இடத்திற்கு அடைத்து வைக்க முடியும் ?என்கிற சிறிய புரிதல் கூட இல்லாமல் இப்படி சண்டை போடுகிறார்களே என்று ஆதங்கமும் வருகிறது.
இறைவன் உன்னை போல் பிறரை நேசி என்று தான் சொல்கிறார் ஆனால் ஏன் வேற்று மதத்தவர் மேல் இப்படி ஒரு கடுமையான தாக்குதல் நிலத்தின் அடிப்படையாக வைத்து தான் மதங்கள் கட்டமைக்கப்படுகிறதா அப்படி என்றால் இப்படிப்பட்ட மதங்கள் நமக்குத் தேவையா? என்று தோன்றுகிறது மதம் என்பது ஒரு குழுவை சேர்த்து வைக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.
கடவுள் மதத்தை ஒரு நாளும் உருவாக்கவில்லை நாம் தான் மதத்தை உருவாக்கி இருக்கிறோம் நாம் தான் அதற்கு கொள்கைகளை உருவாக்கி இருக்கிறோம் அப்படி இருக்கும்போது மனிதர்களே மதத்தால் மடிவதை பார்த்து வேதனை பட வேண்டி இருக்கிறது.
எத்தனை காலம் இந்தப் போர் நடக்கும் என்று தெரியவில்லை, மனித மனதிற்குள் மாற்றம் ஏற்படும் வரை இந்த போருக்கு முடிவே இல்லை என்று தான் தோன்றுகிறது இதில் நாம் என்ன செய்ய முடியும்? என்றும் தோன்றுகிறது.
நாம் இங்கு இருந்து கொண்டு நம் பக்கத்தில் இருக்கிற வேற்று மத சகோதர சகோதரிகளை நான் எப்படி பார்க்கிறோம் என்பதிலிருந்து தான் தொடங்குகிறது. நம் மனதில் அவர்களைப் பற்றிய எண்ணமும் நாம் அவர்கள் மேல் மதத்தால் அவர்கள் மேல் கொண்ட வெறுப்புணர்வு கூட இது ஒரு காரணம் எங்கோ ஒரு நாட்டில் நடக்கிறது என்பதல்ல ஒவ்வொரு மனித மனதிற்குள் முதலில் ஒரு வேற்று மதத்தவர் மேல் உள்ள வெறுப்புணர்ச்சியே இத்தகைய போருக்கு காரணம் என்று தோன்றுகிறது
மதம் அல்லாத ஜாதி இல்லாத படி ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்றால் அதை நினைத்துப் பார்க்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மனித இனத்திற்குள் இத்தனை பாகுபாடுகளை விதைத்ததும் நாம்தான் அதில் வெளியே அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஒவ்வொரு மனமும் ஆசைப்படும்.
ஆனால் அதற்காக நாம் எந்த முயற்சிகளை எடுக்கப் போவதில்லை எடுத்து வைக்க தயங்குகிறோம். அதில் முதல் முயற்சியாக நாம் ஒவ்வொருவரும் கடவுள்தான் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கடவுள் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும் ஒவ்வொருவருமே கடவுளின் அம்சமாக தான் இருக்கிறோம்
நம்மிடம் அன்பு, கருணை, இரக்கம் இந்த குணங்களை அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது ஆனால் ஏதோ ஒரு வெறுப்புணர்வை நாம் வளர்த்துக் கொள்கிறோம்.அவர்கள் அப்படித்தான் என்கிற ஒரு மனப்பான்மையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது அவர்கள் அப்படி செய்கிறார்கள்.
நம் மதத்தில் சொல்லி இருக்கிறதே அதை நாம் பின்பற்றுவோம் என்கிற புரிதலுடன் வேற்று மதத்தவரையும் நண்பராக பார்க்கக்கூடிய அந்த மனம் இருந்தாலே போதும்.
ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்று பல்வேறு விதமாக பேசுகிறார்கள் வேறு வேறு மொழியாக இருந்தால் என்ன வேறு வேறு மதமாக இருந்தால் என்ன வேறு வேறு ஜாதியாக இருந்தால் என்ன நாம் எல்லோருமே மனித குலம் தான் மனிதநேயம் மட்டுமே நம்மிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரோட்டில் ஏதோ ஒரு சிறு குழந்தை ஒரு வண்டியின் மோத போகிறது என்று நினைத்தவுடன் அடுத்த நொடியே அதை காப்பாற்றப் போகிறோம் அப்படி இருக்கும்போது, அங்கே எத்தனை பச்சிளம் குழந்தைகள் குண்டடி பட்டு சாகின்றனவே அதை பார்க்கும் போது அவர்களின் மனம் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்று யோசிக்கிறது மதம் அவர்களை பிடித்த ஆட்டுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
நம் நாட்டின் முக்கியமான கொள்கையே வேற்றுமையில் ஒற்றுமை தான் பலவிதமான எண்ணங்களையும் பலவிதமான மொழிகள் பேசுகிறவர்களையும் பலவிதமான இனக்குழுக்களும் சேர்ந்து தான் ஒரு நாடாக இருக்க முடியும். நம் ஒவ்வொருவரும் மனதிலும் உள்ள இரக்க குணத்தை வளர்த்தாலே இப்படிப்பட்ட போர் நடக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். நன்றி வாழ்க வளமுடன்.






படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.