பால் பொங்கி பாத்திரம் கருவி என் மனம் எங்கேயோ ?

0

காலையில் பாலை அடுப்பில் சிம்மில் வைத்து விட்டு நேற்று போட்ட காப்பியில் மிச்சத்தை சூடாக்கி குடித்துக் கொண்டிருந்தேன். குடித்துக் கொண்டிருக்கும் போதே என் நினைவுகள் எங்கேயோ..

 கணவனுக்கு கால் வீங்கி விட்டது என்று சொன்னவுடன் நேற்று இரவு முழுவதும் அவர் குடித்து குடித்து தன் உடலை கெடுத்துவிட்டார்  என்று ஆதங்கமும்  கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்காமல் எல்லாவற்றையும் தண்ணியாக இறைத்து விட்டார் என்று வேதனையும் வந்தது.

 இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை என் நகைகளை எல்லாம் அடகு வைத்து எல்லாவற்றையும் செலவழித்து விட்டாரே, கேட்ட நேரம் கழட்டி கொடுத்த என் மேலே எனக்கு வெறுப்பும் வந்தது.

 பிழைக்கத் தெரியாத பெண்ணாக இருந்திருக்கிறாயே என்று உன்னிடம் எதுவுமே இல்லையே என்று என் மேலே எனக்கு சலிப்பும், ஒரு கணவனிடம் புத்திசாலித்தனமாக காசை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் திறமை எனக்கு இல்லையோ என்று இனி அவ்வளவுதான் நாம் தான் சம்பாதிக்க வேண்டும் என்றும் தோன்றியது.

அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது  என் சம்பளம் எனக்கு மட்டும்தான் என்றும் எனக்கு போய் தான் மிச்சம் உள்ளது உங்களுக்கு என்றும் சொன்னார்அவர் சொன்ன வார்த்தை இன்னும் எனக்கு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

 என் நகை அடகு வைத்து விட்டு செலவுகளை பார்த்தார் லோன் வந்தபோது அந்த காசை கேட்டபோது என் காசை நீ எப்படி கேட்பது என்று என்னை அடித்தார்,அப்பொழுதே எனக்குத் தோன்றியது பெண்களுக்கு என்று தனியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. ஆனாலும்  சின்ன விஷயம் தான் சம்பாதிக்க முடிகிறது.

 பெரிதாக படிப்பு ஏதும் இல்லாத நேரத்தில் கணவனை சார்ந்தே வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு. நான் இவரிடம் பல காலம் ஏன் வாழ்கிறாய் என்று கேள்வி எனக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கும்போது என் பிள்ளைகளுக்காக தான், அவர்களின் படிப்புக்காக தான் இவரை சார்ந்திருக்கிறேன் என்று.




 எனக்கும் அந்த பணத்தை சம்பாதிக்கும் திறமை இருந்திருந்தால் இவரின் இத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டு நான் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லைநான் இப்பொழுதுதான் சிறிதாக ஒரு பிசினஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

 இந்தப் பால் கொட்டி போனதில் உனக்கு என்ன இவ்வளவு கவலை ?  என்று என்னை கேட்பீர்கள்  ஆம் சொல்கிறேன். என் பிள்ளைகளுக்கு பால் வாங்க கூட இவர் காசு தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார் எனவே அரை லிட்டர் பாலை வாங்கி வைத்து அதில் ஒரு நூறு தண்ணீரை ஊற்றி என் மூன்று பிள்ளைகளுக்கும் காபி போட்டு கொடுக்க வேண்டும் என்று நான் கடுங்காப்பி குடிப்பேன்.
 காலை எழுந்தவுடன் அந்தப் பாலை சிம்மல் வைத்துவிட்டு நேற்று போட்ட காப்பிய குடித்துக் கொண்டிருக்கும் போது என் யோசனை  எங்கோ சென்று விட்டது அரை லிட்டர் பாலில் கால் லிட்டர் கொட்டி விட்டது பாலை அதிகமாக வாங்க முடியாமலும் அதில் தண்ணீர் சேர்த்து  சரியாக காபி போட்டு கொடுக்க முடியாமலும் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.

 அதை என் பிள்ளைகளிடம் சொல்லும் போது எனக்கு மிகவும் வலிக்கும்.
இந்த மன வேதனைகளை எல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன்.
என்  மன வேதனைகளை எல்லாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நான் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

 என்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். என் பிரச்சனைகளை எல்லாம் அழகாக சந்திக்கும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். கொட்டிய பாலை நான் எடுக்கவே இல்லை ஏனென்றால் என் வீட்டில் இரண்டு பூனை குட்டிகள் இருக்கிறது அவைகளாவது நிம்மதியாக குடித்துவிட்டு போகட்டுமே என்று என்று நிம்மதியாக இருக்கிறேன் 


பால் கருகிப் போனாலும் என் மனம் நம்பிக்கையை விடாமல் இருக்கிறது ஒன்றும் இல்லாமல் போனால் தான் உயரமாக பறக்க முடியும் என்கிற நம்பிக்கையில் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  நன்றி,

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)