என் பிள்ளைகள் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெங்களூருக்கு வேலைக்கு போகணும் என்று சொன்னார்கள் நானும் டிகிரி படித்து விட்டு வீட்டிலேயே இருந்தால் நல்லதில்லை என்று சரி என்று சொன்னேன்
வாட்ஸ்அப் இல் அந்த கம்பெனியோட பேசி அவர்கள் இன்டர்வியூக்கு வர சொன்னார்கள் இன்டர்வியூக்கு வரும்போது உங்கள் லக்கேஜ் எல்லாம் கொண்டு வாருங்கள் உடனே வேலை ரெடியாக இருக்கிறது என்று சொன்னார்கள்
முதலில் 3,500 கட்ட வேண்டும் ஒரு மாத சாப்பாடு, தங்குமிடம்,கம்பெனியின் உடை அதற்காக அந்த பணத்தை வாங்குவதாக சொன்னார்கள் நானும் சரி என்று சொல்லி சம்மதித்தேன்.
பஸ்சுக்கு டிக்கெட் எல்லாம் போட்டாச்சு பணம் ரெடி பண்ணி விட்டேன் போகிற நேரத்தில் தான் அது ஒரு பிராடு கம்பெனி என்று தெரிந்தது.
வேலை ரெடியாக இருக்கிறது என்றவுடன் ஒழுங்காக விசாரிக்காமல் முடிவெடுத்தது நமது தப்பாக இருந்தாலும் இதே மாதிரி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
பெங்களூர் வேலை என்றவுடன் உடனே பிள்ளைகளை அனுப்பாமல் நன்றாக விசாரித்து அனுப்ப வேண்டும் என்று நான் உணர்ந்து கொண்டேன்.
இதேபோல் ஒரு வருடத்திற்கு முன்பு என் மகனும் பெங்களூரில் வேலை செய்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பிஜி புக் பண்ணனும் என்று ஒரு ஒரு ஆப்பு பார்த்து ₹3000 பணமும் கட்டியாச்சு.
என் மகனும் நிம்மதியாக அந்த பிஜி க்கு போனான் ஆனால் அவன் கட்டிய மூவாயிரம் ரூபாயை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நீங்கள் ஆன்லைனில் கட்டியது செல்லாது இங்கு முழுவதுமாக கட்ட வேண்டும் என்று சொன்னார்கள்
அவர்களை தொடர்பு கொண்டு பேசினாலும் அவர்கள் ஒழுங்காக பதில் அளிக்கவில்லை நாங்கள் திரும்ப தந்து விடுவோம் என்பதெல்லாம் சொன்னார்கள் ஆனால் அதுவும் நடக்கவில்லை. என் மகனும் இந்த யூடியூப் சேனல் பார்த்துதான் இது ஒரு ஸ்கேம் என்று தெரிந்து கொண்டான்.
click here>>>>>https://www.youtube.com/watch?v=m1CjHLDmNKY
எனவே புதிதாக வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு தடவைக்கு இரு தடவை நன்றாக ஆலோசித்து முடிவெடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி.




படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.