உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளைஞர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளைஞர்களின் ஈடுபாடு, அதிகாரமளித்தல் மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இளைஞர் மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது
உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் நல்வாழ்வு வளர்ச்சிசவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சிலவற்றை இங்கு காண்போம்
கல்வியின் தரம்:
வறுமை மற்றும் பற்றாக்குறை பாலினை ஏற்றத்தாழ்வுகள் இளைஞர்கள் தரமான கல்வியை பெற போராடுகிறார்கள்.
வேலையின்மை பிரச்சனை:
இளைஞர்களின் வேலையின்மை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே இருக்கிறது அவர்கள் நிலையான சரியான வேலை வாய்ப்பை கண்டுபிடிக்கவே போராடுகிறார்கள். அவர்களின் திறமைகள் மற்றும் தகுதிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
நிறைய நேரங்களில் அவர்களின் படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் தான் இருக்கிறது. அவர்களுக்குள்ளாகவே பல கேள்விகள் எதற்காக இதை படித்தோம் என்று தெரியாமல் என்று மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.
மனநலம்
கவலை,மனச்சோர்வு, மன அழுத்தம் மனநல பிரச்சனைகள் கல்வியால் வந்த அழுத்தம் ,குடும்பத்தால் அழுத்தம் சமூக எதிர்பார்ப்புகள் போன்றவை அவர்களுக்கு சவால்களாக இருக்கின்றன.
உடல்ரீதியான பிரச்சினைகள்
பாலியல் மற்றும் இனப்பெருக்க வயதில் இருப்பதால் தனிமனித முன்னேற்றத்திற்கு மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.ஒரு சில பேர் செய்கிற தப்பான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த இளைஞர்களையே தப்பாக இந்த சமுதாயம் பார்க்கிறது.
எதிர்கால பயம்:
வறுமை மற்றும் சமத்துவமின்மை பின்தங்கிய நிலையில் பல இளைஞர்கள் இருப்பதால் அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு எதிர்காலத்தைப் பற்றிய பயம் போன்றவை அதிகமாகவே இருக்கிறது.
அரசியல் பங்கேற்பு:
பல இளைஞர்கள் அரசியல் வருவதற்கு பயப்படுகிறார்கள் அதனால் விலகி இருந்து தொண்டர்களாக இருக்க பயப்படுகிறார்கள் அருகில் தலைவராக வர ஆசை இருந்தும் ஒதுங்கி இருக்கிறார்கள்
பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்பு இதற்கு ஒரு காரணமாக அமையலாம்
போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல்:
அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக இன்று இளைஞர்களை போதையின் பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது மோதல் மற்றும் வன்முறையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் இதிலிருந்து தப்ப முடியாமல் தவிக்கிறார்கள்
காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்:
பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழல் சவால்களை குறித்தும் அதிக அளவில் அக்கறை கொண்டுள்ள இளைஞர்கள் இயற்கையில் ஏற்படும் சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை தரத்தை நேரடியாக பாதிக்கின்றன
தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி:
தொழில்நுட்பம்மற்றும் இன்றைய விஞ்ஞான உலகத்தின் வளர்ச்சி அதிக பிரச்சினைகளை எதிர் கொள்பவர்கள் இளைஞர்கள் தான்
டிஜிட்டல் கருவிகளை கையாளத் தெரிந்தும் அதன் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான்
சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்கு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள். சமூகங்கள். தனி நபர்கள் இணைந்து செயல்பட்டு இளைஞர்களுக்கு ஆதரவான சூழ்நிலையையும் உருவாக்குவது நல்ல ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். வாழ்க வளமுடன்.

.png)

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.