உண்மை பல நேரங்களில் கசப்பாகத்தான் இருக்கிறது.மிகுந்த மன வேதனையோடு எழுதுகிறேன்.
என் தோழி ஒருத்தி, தாய், தந்தை இல்லாததால் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள். கல்லாரி முதலாம் ஆண்டிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.
சந்தோசமாக வாழ்க்கை தொடங்கியது.தொடங்கிய சில நாட்களிலேயே அவன் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
அவன் மிகப் பெரிய குடிகாரன் என்று. குடும்பத்தில் வளர்த்தவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் எங்கேயும் செல்ல முடியவில்லை, யாரிடமும் சொல்ல முடியாமல் சகித்து கொண்டு வாழ ஆரம்பித்தாள்.
ஒரு பெண் குழந்தை பிறந்தது,இனி அவள் கணவன் திருந்துவான் என்று எண்ணினாள்.மறுபடியும் அதே நிலைதான்.தினமும் அடி,உதை வாங்கினாள்.
எப்படியாவது திருத்தி விடலாம் என்று ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை சகித்து கொண்டு வாழ ஆரம்பித்தாள். போதை பழக்கத்துக்கு வேறு பழகி விட்டான்.
அவனை திருத்துவதற்கு கோயிலுக்கு போனாள்.மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வாள்.கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக போகும்,பின் மறுபடியும் பழைய நிலைக்கே சென்று விடுவான்.
போதை தலைக்கேறி ஆபாச வீடியோக்களை பார்த்து கட்டாயப்படுத்துவான்.இப்போது ஏழுமாத கைக்குழந்தை வேறு இருக்கிறான்.
எத்தனையோ பேர் குழந்தைக்காக தவம் இருக்க தண்டனைக்கு அழகான பெண் குழந்தையும்,ஆண் குழந்தையும்.சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.
இவளுக்கு சொந்தங்கள் இல்லாததால் அவனது உறவில் அக்கா வீட்டிற்கு வந்து விட்டாள்.ஏதாவது வேலைக்கு போகச்சொல்லலாம் என்றால் கைக்குழந்தைகளை எங்கே விடுவது ?
தம்பி மனைவி என்ற பாசத்தால் வீட்டிலேயே வைத்து கவனிக்க முடியாததாலும், பொருளாதாரம் இல்லாத சூழ்நிலையால் ஒரு அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்து விட்டாள்.சரியாகத்தான் செய்திருக்கிறார்கள்.
அந்த அரசு காப்பகத்தில் சரியான கவனிப்பு இல்லை என்றாலும், பிள்ளைகளுக்கும் அவளுக்கும் மூன்று வேளை கஞ்சியாவது கிடைக்கிறதே என்று திருப்தி கொண்டாள்.
அந்த காப்பகத்தில் சரியான பாதுகாப்பு இல்லை, ஐந்து மணிக்கெல்லாம் வேலை செய்பவர்கள் சென்று விட,சமூக விரோதிகள் வந்து செல்லுமிடமாக மாறி விட்டது.
அங்குள்ள வார்டன்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது ஏற்று கொள்ள முடியாததாக இருக்கிறது.
கணவனால் கைவிடபட்ட பெண்ணுக்கு போவதற்கு இடமில்லாமல் அரசு காப்பகத்தில் விட்டால் வேலியே பயிரை மேய்வது போன்ற நிலைமை.
வார்டனுக்கோ அல்லது அங்கு வேலை செய்யும் சக அதிகாரிகளுக்கோ குறைந்தபட்ச அக்கறை இருந்தால் காப்பாற்ற முடியும்.
நம்மால் என்ன செய்ய முடியும் ? எங்கோ யாருக்கோ பிரச்சனை என்றால் நமக்கென்ன என்று யோசிக்க தோன்றும்.
நம் குடும்பத்தில் சகோதரிக்கு ஏற்பட்டால்,பிரச்சனையை தீர்க்க வேண்டாம்.ஒரு நிமிடம் நினைத்து பிரார்த்தனை பண்ணுங்கள் போதும்.
அரசனை நம்பி, புருசனை கைவிட்டது போல என்ற பழமொழிக்கேற்ப புருசனை நம்பி வாழ முடியாமல், சாகவும் முடியாமல் குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறாள்
உங்களிடம் இறக்கி வைத்ததால் என் மனப்பாரம் குறையும் என்ற நம்பிக்கையில் வாழ்க வளமுடன்.




Amazing fact Aasha.... Your voice for the forbidden Poor Women is admirable.... Great post..... Jane
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்கு