அரசியலில் மட்டுமல்ல ஒவ்வொரு துறையிலும், தலைவராக வேண்டுமா?
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. திருக்குறள்
1.எல்லாரையும் அரவணைத்து போகும் இனிய குணம் உடையவராக இருக்க வேண்டும்.
2.தொண்டர்கள் அல்லது சக ஊழியரிடம் பரிவோடும்,அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவராக இருக்க வேண்டும்.
3.தன்னம்பிக்கையும்,தன் துறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும் ஒருவரால் தான் மற்றவர்களிடம் நம்பிக்கை பெறமுடியும்.
4.சுயக்கட்டுப்பாடோடு நடந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
5. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குழம்பாமல், சரியான நேரத்தில்,சரியான முடிவு எடுக்கும் திறமை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
6. சக ஊழியரிடம் என்ன அளவுக்கு உழைப்பை எதிர்ப்பார்க்கிறாரோ,அதை விட அதிகமாக உழைப்பவராக இரு்கக வேண்டும்.
7.யூகத்தின் அடிப்படையில் செயல்படாமல், தன் வேலையைத் திட்டமிட்டு,அந்தத் திட்டத்தின்படி வேலைச் செய்பவர் தான் சிறந்த தலைவர்.
8.தொண்டரோ, சகஊழியரோ தவறு செய்தால் அதற்கு தான் காரணம் என்று, முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் சுபாவம் உடையவர் தான் நல்ல தலைவர்.
9.அதிகார தோரணையைக் காட்டாமல்,தொண்டர்களை அரவணைத்து செல்பவர் தான் சிறந்த தலைவர்.
10.பதவி,பட்டத்திற்காக அலைபவராக இருக்க கூடாது.
11. தனது பதவியை தட்டி பறித்து விடுவார்களோ என்று பயப்படும் ஒருவரால் தைரியமான தலைவராக முடியாது.
12.சுயநலம் இல்லாமல், புகழ், பெருமை வந்தால், தொண்டர்களையேச் சேரும் என்று திருப்தி அடைபவராக இருக்க வேண்டும்.
இந்த குணங்களை அவர் வளர்த்துக் கொண்டால் மிகச் சிறந்த தலைவர் ஆகலாம்.
உங்கள் தலைவர் இந்த பண்புகளோடு இருக்கிறாரா என்று ஆலோசித்து இந்த தேர்தல் நேரத்தில் சரியான முடிவெடுங்கள்,வாழ்க வளமுடன். நன்றி.
ப



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.