மனைவியின் மிகப் பெரிய ஆசையும், அவள் கணவரின் மிகப் பெரிய ஆசையும்.

0

 


மனைவியன் மிகப் பெரிய ஆசை என்னவாக இருக்க முடியும்..

 தன் ஆசைக் கணவரோடு அழகாக உடை உடுத்திக் கொண்டு 

தலையில் பூச்சூடி,கொஞ்சம் நகையைப் போட்டு

ஒரு பைக்கில் எறி, கோயிலுக்கு போவது, கடைகளுக்குப் போவது,

ஓட்டலுக்குப் போய் சேர்ந்து சாப்பிடுவது

கொஞ்ச நேரம் அவளுக்காக ஒதுக்கி

அவளுக்காக காசு செலவு செய்து எல்லாவற்றையும் 

வாங்கி கொடுத்தாலும் அவள் எதிர்ப்பார்ப்பது ..

உங்கள் நேரத்தை அவளுக்காக ஒதுக்கினால்,

அவள் பேசுவதை ஆமோதிப்பது போல் 

காது கொடுத்துக் கேட்டால்--தன் பிள்ளைகளின்

எதிர்காலம் குறித்து  பேசினால்

உங்களுக்காக நான் இருக்கிறேன் என்ற 

நம்பிக்கையைக் கொடுத்தால் போதும்.

அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.





ஆனால் இன்றைய கணவரின்  மிகப் பெரிய ஆசை, ஆனந்தம்

நண்பர்களோடு  சேர்ந்து தண்ணீர் அடிப்பது,

சேர்ந்து சிரித்து  கொண்டாட்டம் போடுவது

நேரில் போக முடியவில்லை என்றால் வாட்ஸ்அப்பில்,

வீடியோ காலில் கான்ப்ரன்ஸில் அரட்டை அடிப்பது,

 உலகத்தில் தான் தான் சந்தோசமாக இருப்பதுபோல் நடிப்பது,

செல்போன் உறவுகளை வளர்க்க அல்ல, குடும்ப உறவுகளை மறக்க;

எங்கோ நடந்த நிகழ்விற்கு லைக் பண்ணவும் இவர்கள்-தன் மனைவி

 ஆசையாய் சமைத்த உணவிற்கு லைக் சொல்லத் தெரியாதவன்.

அவள் சமையலறையில் வேலை செய்யும்போது

கூட சேர்ந்து இருந்து உதவி செய்ய தெரியாதவன்.

அவள் குளித்து, உடைமாற்றி, பூவும் பொட்டும்

 வைப்பதை ரசிக்கத் தெரியாதவன்.

தன் பிள்ளைகளிடம் எதிர்காலம் குறித்து பேசாதவன்.

வேலைப்பளு அதிகமானால் விடுமுறை எடுத்து சும்மா இருப்பான். 

தன் மனைவிக்கும் வேலை அதிகம் ஆனால்

அவளுக்கும் ஓய்வு வேண்டும் என்று நினைக்கத் தெரியாதவன்.

 எத்தனை ஏமாற்றங்கள் இருந்தாலும் பிள்ளைகள் வளர்ந்து ஆசைகளை

 நிறைவேற்றும் என்று ஆனந்தத்தில் இருக்கிறாள். வாழ்க வளமுடன்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)