இன்றைய குடும்பங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக செல்போன் மாறி உள்ளது,
எப்படி என்றால் கணவர் செல்போனை மனைவியோ அல்லது மனைவியின் செல்போனை அவருக்குத் தெரியாமலே பார்ப்பது பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது,
இன்று செல்போன் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.பண பரிவர்த்தனை, விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாமே செல்போன் ஆக மாறிவிட்டது.
பல நல்ல செயல்களுக்கு பயன்படும் செல்போன், இன்று பலரின் உயிரை வாங்கி உள்ளது.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் எனது கணவரின் செல்போனை நோட்டம் விட்டு கொண்டிருந்தேன்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் சந்தேகம் அடைந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டேன்.
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டிப் பார்ப்பது என்பது, கழிவறையை எட்டி பார்ப்பது போன்றதாகும்.எனவே என் சந்தேக புத்தியை மாற்றிக்கொண்டேன்.
சந்தேகமடைந்த மனைவி அல்லது கணவரின் செல்போனைப் பார்த்தால் யாரிடம் பேசினாய், எதற்கு பேசினாய், யார் அவர் ?என்ற கேள்விகள். இதனால் குடும்பத்தில் சந்தேகம், சண்டை.
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்கு பயன்படுத்தவே தவிர அழிவுக்கு அல்ல.இதை தவிர்க்க என்ன வழி.?
அவரின் கடந்த கால நினைவுகள்,நிகழ்கால பழக்கங்கள்,எல்லாவற்றையும் தோண்டி பார்ப்பது நல்லதல்ல. விட்டு விடுங்கள்.
உங்களுக்கு என ஒரு தனிமையும், அதில் சில ரகசியங்களும் இருக்கும். அது போல் அவர்களுக்கும் இருக்கும்.அனுபவங்கள் தான் ஒருவரை பக்குவப்படுத்தும்.
நீங்கள் கேட்காமல் இருந்திருந்தால், சந்தேகப்படாமல் இருந்தாலே, இப்படி நம்புகிற கணவனோ, மனைவியோ அல்லது பெற்றோரோ, அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது என்று நினைத்து திருந்துவார்கள்.
உங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டு தன் வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உங்களிடம் வந்து செல்வார்கள்.
நீங்கள் அதை சந்தேகப்படாமல் நிதானமாக செயல்பட்டால் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
நீங்கள் எப்போதும் அவர்களை பார்க்காமல் சந்தோஷமாய் இருங்கள். காலம் எல்லோரையும் மாற்றி விடும். நிதானம் சமாதானத்தை தரும்.
அடுத்தவரின் செல்போனை நோட்டம் பார்ப்பது அநாகரிகம் என்றுணர்ந்து செயல்படுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே,
வாழ்க வளமுடன்.



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.