நான் பிளாக்கருக்கு வந்த கதையும் , அட்சன்ஸ் அப்ரூவல் வாங்கிய கதையும்.

0

                     நான் பிளாக்கருக்கு வந்த கதை



எனக்கு கம்ப்யூட்டரில் நியூ டேப் ஓபன் செய்ய தெரியாமல் இருந்தேன், யூட்யூபில் நியூ டேப் ஓபன் செய்வது எப்படி என்று தேடினேன், ஆனால் வரவில்லை. என் மகனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.

இமெயில் ஐடி ஓபன் செய்வது முதல் பிளாக்கரில் ஓபன் செய்வது வரை எல்லாமே செய்து தந்தான்.

முதலில் எழுதி போட்டோ எடுத்து அப்லோட் பண்ணி போட்டேன். ஏதோ என் மனதில் உள்ளதை யாருடனோ சொல்வது போன்ற திருப்தி.

என் குடிகார கணவரிடம் பணம் கேட்டு அடி உதை மிதி வாங்கி, அதிகம் படித்திராத{ பிளஸ் 2}, சிறுவயதிலேயே{19] திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றேன். பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் தாங்கி வாழ்ந்து வந்தேன்.

வீட்டிலிருந்தே என்னாலும் ஒரு ரூபாய் சம்பாதிக்க முடியுமா? என்று யூட்யூபில் தேடியபோது தான் கிடைத்தது இந்த பிளாக்கர்.

ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன் ஆனால் எல்லாவற்றிற்கும் என் பிள்ளைகளின் உதவி தேவைப்பட்டது. குரலும் நன்றாக இல்லை. அதனால் பிளாக்ரையே தொடர்ந்தேன்.

 என் மனக்குமுறல்களையும் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பிரதிபலிப்பாக இருந்தது இந்த பிளாக்.

அதிலொன்றும் ஈசியாக இல்லை, செட்டிங்ஸ் முதல் சேர்ச் கன்சோல், சைட் மேப், யூ ஆர் எல் நான் அறிந்திராத வார்த்தைகள்.

இருபது வருடங்களாக சமையல், குடும்பம், குடும்பச்சுமை இவற்றையே தாங்கியவளுக்கு இது புதிதாகவும் சவாலாகவும் இருந்தது.

என்னால் முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது .பிள்ளைகளிடம் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன் பல நேரங்களில் பிள்ளைகள் இது தேவை தானா? என்று கேள்வி கேட்டன. இதற்காக பல நாட்கள் அழுதிருக்கிறேன். என்னாலும் ஒரு ரூபாய் சம்பாதிக்க முடியுமா? என்று கூறி உதவி கேட்டேன்.

பின் நானாகவே கூகுளில் போட்டோ அப்லோட் பண்ணுவது, தமிழில் டைப் அடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு தமிழில் எழுதுவது போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன். இது இப்படியே கொஞ்ச நாட்கள் எழுதினேன். 

உலகத் தமிழ் சொந்தங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள். பின் வாய்ஸ் நோட் பேட் என் மகன் டவுன்லோட் செய்து தந்தான். அதில் நான் எழுதியதை வாசித்து சீக்கிரமாக எழுத முடிந்தது. இதை கற்க வைத்த இறைவனுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். 

எனக்கு இரண்டு யூடியூப் சேனல் மிக உபயோகமாக இருந்தது

  ராக்கர்ஸ் மிக்ஸ்

விஎஸ் ஃப்ரபஸ்னஸ்

முதல் முதலில் பிளாக்கரில் எழுதவேண்டும் என்ற யோசனையைத் தந்தது அஸ்க் ஜான்சி என்கிற யூடியூப் சேனல். இவர்கள் எல்லாரும் தான் எனக்கு முன் மாதிரியானவர்கள். அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

என் குடும்பத்தில் உள்ள சுமை களுக்கு மத்தியில் என்னால் எழுத முடிந்தது.

 அட்சன்ஸ் அப்ரூவல் வாங்கிய கதை.



என் தங்கையின் உதவியால் இந்த டோமைன் வாங்கினேன். அதிலும் ஹெச் டி எம் எல் ,சைட் மெப் ஜெனரேட்டர் என பல வேலைகள் இருக்கிறது.

பல நாட்கள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைத்துவிட்டதா என்று காத்திருந்து இருக்கிறேன். கன்டன்ட் அப்ரூவல் கிடைக்கவில்லை. பல நாட்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன்.

ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு பிளாக்கரில் வேலை செய்தேன். சின்ன சின்ன விஷயங்களுக்கும் ராக்கர் மிக்ஸ் யூடியூப் சேனல் தான் உதவியது. கடைசியாக சைட் மேப்பில் டொமைன் வாங்கியதை அப்லோட் பண்ணிய பிறகுதான் எனக்கு அட்சன்ஸ் அப்ரூவல் கிடைத்தது.

அப்ரூவல் கிடைத்தது ஒருநாள் இரவு தான் பார்த்தேன், எல்லோரும் தூங்கிவிட்டார்கள், என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நானே சந்தோசத்தில் இருந்தேன். 

அன்று இரவு என்னால் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டது போன்று ஒரு திருப்தி. என்னைப்போல் பலரும் பிளாக்கரில் சம்பாதிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். எனக்கு கிடைக்க வைத்த இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும். இதில் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.

 பிளாக்கரில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நம்மைவிட சிறியவர்களுக்கு இந்த இண்டர்நெட் உலகத்தை பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது. அவர்களிடம் கேட்டு என்னை நான் வளர்த்துக் கொள்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)