நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப் போகிறேன்? இந்தக் கேள்வி உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கேள்வி.
குழந்தைப் பருவம் முடிந்து கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தவுடன் எந்த கடவுள் நம்மை படைத்தார்? என்ற கேள்வி எழும்பும்.
யாராவது இறந்த வீட்டில் பார்த்தவுடன், நாம் எங்கே இருந்து வந்தோம் ?எங்கே போகப்போகிறோம்? என்ற கேள்வி வந்துவிடும்.
நான் யார்? என்னை படைத்தவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? அவர்தான் எல்லாவற்றையும் செய்கிறாரா ?
நல்லதற்கும், தீயதற்கும் நான் காரணமா? என்று என் மனம் யோசிக்கும் .
சாவு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நல்லா இருக்கும் இல்ல! என்று என் மகன், அவன் யோசிக்கிற வயது வந்தபோது என்னிடம் கேட்டான். பதில் சொல்லத் தெரியாமல் முழித்தேன்.
இப்பொழுது எனக்கு 40 வயது. இப்பொழுது தான் கொஞ்சம் புரிந்திருக்கிறது கடவுள் என்பது எங்கேயும் தேடி அலைய வேண்டிய தேவை இல்லை, அது நம் உள்ளத்தில் இருக்கிறார் என்று.
நாம் என்ன நினைக்கிறோமோ அதை இந்த பிரபஞ்ச சக்தி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்றும்.
ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு கொள்கைகளை வைத்துக் கொண்டு ஒரு வழியை பின்பற்றுகிறது. எந்த வழியைப் பின்பற்றினாலும் சேருமிடம் ஒன்றுதான். அதுதான் பிரபஞ்ச சக்தி.
நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று முழு மனதாக நினைத்தால் அது நடக்கும்.
அதற்கான வழி உண்டாகும்.
நீங்கள் யாரையாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் நடக்கும்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப நல்ல செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் நாம் தான் காரணம்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே மாறி அது நடக்கிறது.
நல்ல எண்ணங்களை நினைத்து, அதைப் பழக்கமாக்கிக் கொண்டால் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.