வார்த்தைகளில் மந்திரம் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று தான் சொல்வேன். அது என்ன? அந்த மந்திரச்சொல்?
நன்றி, நன்றி, நன்றி..
இந்த நாளைத் தொடங்கும் போது நன்றி இறைவா என்று தொடங்கினால் மிக நல்ல நல்ல நாளாக அமையும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறதல்லவா, அது தான் நம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்ச சக்தி, அந்த சக்திக்கு நன்றி சொல்லி இந்த நாளை ஆரம்பித்தால், அந்த நாள் இனிமையான நாளாக மாறும்.
காலையில் பேப்பர் போடுகிறவர், காவல் காரர், பால்காரர், பெட்ரோல் பங்க் வேலை செய்கிறவர், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர், கண்டக்டர், நடைபாதையில் எதிரில் வருபவர்,
பூக்காரர், ஹோட்டல் சர்வர், டீ கடைக்காரர், ஆபீஸ் காவல்காரர்,ப்யூன் இன்னும் எத்தனை பேர்களோ, அவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு நன்றி சொல்லி பாருங்கள்.
நன்றி என்ற மந்திரச்சொல் கேட்டபோது அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த புன்னகை தரும். இந்த புன்னகை நம்மை உற்சாகப்படுத்தும்.
வேலை செய்யும் இடங்களில் உயரதிகாரிகள் திட்டினாலும், நம்மை விட குறைவான வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் மனதிற்குள்ளே சொல்லுங்கள் நன்றி.
இறைவா எனக்கு கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க வைத்ததற்கு நன்றி என்று சொல்லுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் உடல் சுகம் இல்லை என்றால் ஒரு பேப்பரில் இறைவா இதிலிருந்து குணப்படுத்துவதற்காக நன்றி என்று எழுதிப்பாருங்கள். மாத்திரை செய்ய முடியாததை மந்திரச்சொல் செய்யும்.
யாரிடமாவது ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் அதை நிகழ் கால வாக்கியமாக எழுதுங்கள், உதாரணமாக என் கணவர் அல்லது மனைவி பிள்ளைகள் எனக்கு பிடித்த மாதிரி அந்த காரியத்தை செய்ய வைப்பதற்காக நன்றி இறைவா என்று தொடர்ந்து செயல் நடக்கும் வரை எழுதுங்கள்.
இது நம் பிரபஞ்ச சக்தி, அவர்களிடம் கொண்டு சென்று நடக்க வைக்கும். அதன் மகிமை தெரியும். நன்றி என்ற மந்திரச்சொல் நம் வாழ்க்கையை வசப்படுத்தும்.
வீட்டிற்கு வந்தவுடன் ஒரு நல்ல காபி தரும் மனைவிக்கு நன்றி சொல்லுங்கள் அவளது வெட்கம் கலந்த புன்னகை உங்களுக்கு உற்சாகம் தரும்.
பிள்ளைகளிடம் கொஞ்ச நேரம் பேசி இன்றைய நாளுக்கான உணவு, உடுத்த உடை, தங்க நல்ல இடம் இவற்றைக் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
நன்றி சொல்ல பழக்கப்படுத்துங்கள், யாரிடமாவது நன்றி சொல்ல வெட்கமாக இருந்தால் ஒரு பேப்பரில் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல ஆசைப்படுகிறீர்களா அதை மனதார எழுதி விடுங்கள் அது இந்த பிரபஞ்ச சக்தி அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.
இந்தக் கட்டுரையைப் பார்த்து யாராவது ஒருவருக்காவது நன்றி சொல்வீர்கள் அல்லது எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் நன்றி செலுத்துகிறேன்.வாழ்க வளமுடன்.




படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.