வீர தீர செயலுக்கான அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் நீரஜ் பானோட்

0



 வீர தீர செயலுக்கான அசோக் சக்ரா விருது பெரும் முதல் பெண் நீரஜா. இவர் இந்தியாவின் சண்டிகரில் 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ல்பிறந்த நீரஜா மும்பையில் வளர்ந்தார். மும்பை பத்திரிகையாளரான ஹரிஷ் பனோட்,ரமா பனோட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இரண்டு சகோதரர்களுடன் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை சண்டிகரில் பயின்றார். பின் மும்பைக்கு சென்றார். புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பயின்றார். மும்பையில் மாடலின் பணிக்கு முதலில் அறிமுகமானார் . பின் அவரது பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடித்தார்.கணவருடன் துபாய் சென்றார். அங்கு வரதட்சனை கொடுமையால் கஷ்டப்பட்டு இரண்டே மாதத்தில் மும்பைக்கு திரும்பினார். இந்நிலையில் அவரது தோழி விமான பணிப்பெண் வேலைக்கு ஆள் எடுப்பதாக சொல்லவே,தானும் விண்ணப்பித்தார். பான் அம் என்று விமானத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

1986 செப்டம்பர் 5ஆம் தேதி , பான் அம் 73 விமானத்தில் மும்பையிலிருந்து நியூயார்க் செல்ல தயாரானது.அதில் நீரஜாவும் பயணித்தார்.அப்பொழுது கராச்சியில் விமானத்தை சுத்த படுத்துவதற்காகவும், எரிபொருள் நிரப்புவருவதற்காகவும் இறக்கினார் விமான ஓட்டுனர். அப்பொழுது 4 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத நீரஜா , விமான ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடன் அவர்கள் விமானத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். தீவிரவாதிகள் விமானத்தை இயக்குமாறு உத்தரவிட்டார்கள். விமான ஓட்டிகள் வரவில்லை என்றால் இங்குள்ள அனைத்து பயணிகளையும் சுட்டு விடுவதாக மிரட்டினார்கள். ஆனாலும் ஒரு விமானியும் வருவதாக இல்லை. ஒரு பயணியை சுட்டனர் தீவிரவாதிகள்.நீரஜாவிடம் அமெரிக்கர்களை சுடுவதற்காக பாஸ்போர்ட்டை சேகரிக்க சொன்னார் தீவிரவாதிகள். இதை உணர்ந்த நீரஜா பாஸ்போர்ட் சீட்டுக்கு அடியில் போட சொன்னார்.

தீவிரவாதிகளிடம் இங்கு அமெரிக்கர்கள் ஒருவரும் இல்லை எனக் கூறினார் அனைவருக்கும் உணவு வழங்கும் போது நான் இப்பொழுது மின்சாரத்தை துண்டித்து விடுவேன்,அப்பொழுது நீங்கள் அவசரகால வழியின் வழியாக தப்பித்து விடுங்கள் என்று ரகசியமாக சொன்னாள்.அதன்படி அவர்கள் தப்பிக்கும் பொழுது நீரஜாவின் முதுகில் சுடவே,அவர் 3 அமெரிக்க குழந்தைகளை காப்பாற்ற படியே உயிரிழந்தார். தனது இருபத்தி இரண்டாவது வயதிலேயே துணிச்சலாக விமானத்தில் உள்ள 360 பயணிகளை காப்பாற்றினார். இந்த வீர பெண்மணிக்கு நம் நாட்டில் மட்டுமல்ல,பாகிஸ்தான் அரசும் விருது வழங்கி கௌரவித்தது.இந்த வீரப் பெண்மணியை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்வோம்.வாழ்க வளமுடன்.

.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)