இந்தியாவுக்காக வாழ்ந்த அன்னை தெரசா

0





 


அல்பேனியா நாட்டில் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்த இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இவரது தந்தை இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு இறந்தார். இவரது தாயால் நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார்.

இளமைப் பருவத்தில் கிறிஸ்துவ மறை பணியாளர்களும், அவர்களது சேவைகளிலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.

1929 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். அங்குள்ள சட்ட விதிகளின்படி தனது பெயரை மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் சகோதரி தெரசா காசநோயால் தனது 24 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது நினைவாக தனது பெயரை தெரசா என மாற்றிக் கொண்டார்.

கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரசா ஏழை மக்களின் வறுமை, சுகாதாரம் இல்லாமை, வியாதியுடன் உள்ள மக்களை கண்டு வருத்தமுற்றார்.

இச்சூழலில் லொ ரேட் டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தார். சில காலங்களிலேயே இந்தியா தான் இனி என் தாய் நாடு என முடிவெடுத்தார்.

பதினேழு ஆண்டுகள் கல்வி பணியிலிருந்து பின்னாளில் பள்ளி முதல்வர் ஆனார்.

இரண்டாம் உலகப் போரின்போது பஞ்சத்தில் தவித்த மக்களை கண்டு உதவி செய்ய நினைத்தார். அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விலக முடிவெடுத்தார்.

அன்றைய தினத்தில் 5 ரூபாய் பணம், 3 நீல நிற சேலைகள் தான் அவரது சொத்தாக இருந்தது . குடிசையில் வசித்த மக்களை சந்தித்து தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதி கூறினார்.

பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன் செவிலியர் பணியை மேம்படுத்த பயிற்சிகள் எடுத்துக் கொண்டார்.

தெரசா , பள்ளி முன்னாள் மாணவியர் 10 பேர் கொண்ட சேவை குழுவை உருவாக்கி பணி செய்ய தொடங்கினார்.

அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை பள்ளிக்கூடம் என தெரிந்துகொண்டார். ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார்.

சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து இலவச சிகிச்சை அளித்தார்.

1950 ஆம் ஆண்டு, பிறர்அன்பின் பணியாளர் என்ற சபையை துவங்கி புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்தார்.

அதே ஆண்டு மிஷினரீஸ் ஆப் சாரிட்டிஸ், என்ற அறக்கட்டளையை தொடங்கி, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

குப்பையில் வீசப்பட்ட குழந்தைகள், தொழுநோயாளிகள், காசநோய், எச்ஐவி பாதித்தவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் அவர்களை புறக்கணிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வையும் நடத்தினார்.

சிறைக் கைதிகளுக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையான அவர்களுக்கும் ஆலோசனை மையங்கள் மூலமாக உதவி செய்தார்.

இந்தியாவைத் தாண்டி பல நாடுகளிலும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை விரிவுபடுத்தினார்.

அவரது பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளில் 610 சேவை மையங்களை இயங்கி வந்ததுடன், நான்காயிரத்திற்கும் அதிகமான அருட் சகோதரிகளையும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டும் இருந்தது.

45 ஆண்டுகள் மக்களுக்காக சேவைசெய்த தெரசா 1997 செப்டம்பர் 5ம் தேதி இயற்கை எய்தினார்.அன்று முதல் உலக மக்களால் அன்னை தெரசாவாக அழைக்கப்படுகிறார்.

தன் வாழ்நாளை இந்தியாவிற்கு ஆகவும், இந்திய மக்களுக்காகவும் மத அடிப்படையில் இல்லாமல் தொண்டு செய்த அன்னை தெரசாவை நினைவு கூறுவதில் பெருமையடைகிறோம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)