கொரோனா வார்டும், சொல்லப்படாத கதையும்.

0

 கொரோனா வார்டும், சொல்லப்படாத கதையும்.

கொரோனா வார்டில் டாக்டர்களும் , நர்சுகளும் கவச உடை அணிந்து வலம் வரும்போது, ஏதோ வேற்று கிரகவாசிகளை பார்ப்பது போல இருக்கிறது.

உண்மையிலேயே அவர்களின் உலகமும் வேறு ஒரு உலகமாகத்தான் இருக்கிறது.

உயிரை உறைய வைக்கும் பனியிலும், நடுங்க வைக்கும் குளிரிலும், காற்று வீசும் வெயிலிலும் நாட்டின் எல்லையை காக்க கள பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிதான வித்தியாசம் ஒன்றுமில்லை.

இவர்கள் கொரோனா வைரஸ் என்ற உயிர்க்கொல்லி எதிரியிடமிருந்து நோயாளிகளைக் காப்பாற்ற உயிரை பணையம் வைத்து களப் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்.

கொரோனா வார்டில் பணியாற்றுகிற டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் சொல்வதற்கு ஓராயிரம் சோக கதைகள் உண்டு.

அவற்றை தங்களது மனதின் ஆழத்தில் புதைத்து கொண்டு, மோனலிசா புன்னகையை முகத்தில் ஏந்திக்கொண்டு வலம் வருகிறார்கள்.

கணவன் மனைவி இருவருமே மருத்துவர்கள். இவர்களுக்கு வசதிகள் பல இருந்தும் தங்கள் ஆசை குழந்தைகளையும், அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் பல நாட்களாக பிரிந்து வாழும் நிலை.

என்றைக்கு கொரோனா வைரஸ் வார்டில் பணியாற்றி தொடங்கினார்களோ அன்று முதல் இவர்கள் குழந்தைகளை தொடக்கூட அனுமதித்ததில்லை.

அதில் ஒரு அதிகாரி சொல்கிறார் என் நான்கு வயதான ஆசை மகனே தொட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்று. அவர் சொல்லும் போதே அவரது குரல் உடைந்து போகிறது.

 தந்தையின் கம்பீரம் தளர்ந்து போகிறது. ஆனால் இந்த வலியும் ரணமும் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். அவரே அதை ஒத்துக் கொள்கிறார்.

வைரஸ் தொற்று பரவ தொடங்கியதுமே என்னைகொரோனா வார்டில் பணியமர்த்துமாறு என் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டேன். 

 கொரோனா வார்டு பணி அச்சுறுத்தலானது என எல்லோராலும் கருதப்பட்டது. அதனாலே என் சக பணியாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கத்தான் அந்தவேலையை கேட்டு பெற்றேன் என்கிறார்.

அவர் பணியில் என்னென்ன கஷ்டங்கள் அவரே கூறுகிறார்,

ஆறு மணி நேரம் இந்த கவச உடைகள் அணிந்துகொண்டு பணியாற்றுவது உஷ்ணத்தின் உச்சகட்டம்.

இந்த கவச உடைகளை அணிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்

அணிந்த பின்னால் தண்ணீர் குடிப்பது கூட தவிர்த்துவிட வேண்டும். இயற்கை அவஸ்தைகள் இருந்து விடுபட ,கழிவறைக்கு கூட போகக் கூடாது .

வியர்வையில் குளித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

அது மட்டுமா கண் பார்வை மங்கும்.

ஒருவிதமான மயக்க நிலையிலேயே தான் எங்கள் பணி நேரம் அமைகிறது.

சில நேரங்களில் மருந்து சீட்டில் உள்ள மருந்துகளின் பெயர்களை எங்களால் வாசிக்க முடியாமல் போய்விடுகிறது, மற்றவர்களிடம் போய் வாசிக்க கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அதில் ஒரு அதிகாரி இதில் என் முகத்தைப் பாருங்கள் கண்ணாடியும், முகக் கவசமும் அணிந்ததால் முகத்தில் வடுக்கள் ஏற்படுகின்றன என்கிறார்.

நர்சிங் அதிகாரிகளின் கதை இப்படி என்றால், பொதுவாக டாக்டர்கள் எப்போதுமே கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தில் தான் இருக்கிறோம். ஆனால் அவர்களின் உறுதி கொஞ்சம் கூட குறையவில்லை.

அவர்கள் சவால்களை சந்திப்பது தானே வாழ்க்கை என்று எடுத்துக் கொள்கிறார்கள்.

அதில் ஒரு நர்சிங் அதிகாரி இந்த நாட்கள் எல்லாம் என் பொறுமையை சோதிக்கும் நாட்கள்.

என் குழந்தை அம்மாவை பார்க்கணும் என்று சொல்லவே,என் கணவரும் அழைத்து வந்தார். அம்மா வா,வா  என்று அழவே,நானும் பக்கத்தில் செல்ல முடியாமல் அழுதுவிட்டேன் என்றார்.

அதே நேரத்தில் என்னிடம் வலிமை இருக்கிறது ,எங்கள் நோயாளிகளை உத்வேகப்படுத்தி, இதிலிருந்து மீள வைக்க உதவ வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இந்த உறுதிதான் என்னை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வைக்கிறது என்கிறார்.

இதிலுள்ள ஒரு இது தம்பதியரின் குழந்தைக்கும் தொற்று பரவியது.எங்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியான போது எங்கள் வேலையால் நாங்களே எங்கள் குழந்தைக்கு தொற்று வர வைத்துவிட்டோம் என்பது போலத்தான் நான் உணர்ந்தேன் என்கிறார்.

கொரானா என்ற எதிரியை வீழ்த்துகிற நாள் தான் நாட்டின் முன் வரிசையில் நின்று பணியாற்றும் அனைவரும் நிம்மதி காற்றை சுவாசிக்கும் நாளாக அமையும். வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)