ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும், என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப ஒழுக்கம் உயிரை விட மேலானதாக கருதப் படுகிறது.
வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லை என்றால் எந்த ஒரு வெற்றியையும் அடைய முடியாது. ஒழுக்கத்தை விடசுய ஒழுக்கமே சிறந்தது.
ஒழுக்கம் என்பது பள்ளியில் ஆசிரியர் கவனிக்கும் பொழுது கள்ளக் காப்பி அடிக்காமல் இருப்பது, ஆனால் சுய ஒழுக்கம் என்பது ஆசிரியர் கவனிக்காத போதும் கள்ளக் காப்பி அடிக்காமல் இருப்பது
.அப்பா,அம்மா கவனிக்காத போதும் இன்டர்நெட்டில் பார்க்கக் கூடாததைப் பார்க்காமல் இருப்பது.
வேறொருவர் என்னைப் பார்க்கும்போது நான் ஒழுக்கமாக இருப்பது ஒழுக்கம். ஆனால் யாருமே பார்க்காத போதும் நான் ஒழுக்கமாக இருப்பதே சுய ஒழுக்கம். சுய ஒழுக்கமே சிறந்தது.
சுய ஒழுக்கத்தில் இருப்பவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நாம் இப்பொழுது நால்வகை சுய ஒழுக்கத்தைப் பற்றி பார்ப்போம்.
நேரத்தில் சுய ஒழுக்கம்,
பணத்தில் சுய ஒழுக்கம்,
ஆரோக்கியத்தில் சுய ஒழுக்கம்,
உறவுகளில் சுய ஒழுக்கம்.
- நேரத்தில் சுய ஒழுக்கம் என்பது ஒரு நிகழ்ச்சி ஒன்பது மணிக்கு துவங்குவது என்றால் பத்து மணிக்கு செல்வார்கள். உலகத்தில் அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. சும்மா கதை பேசி நேரத்தை வீணாக்கி விட்டு, கடைசியில அவசரமாக செயல்படுவார்கள்.
- நேரத்தில் ஒழுக்கமாக இருப்பது முக்கியம். இந்த நேரத்தில் எந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று நேர அட்டவணை போட்டு செயல்பட வேண்டும்.கடிகாரத்தை உற்றுப் பார்,ஓடுவது முள்ளல்ல, உன் வாழ்க்கை என்பதை புரிந்து கொள் என்ற வாசகம் நேரத்தின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.
- இரண்டாவது பணத்தில் சுய ஒழுக்கமாய் இருப்பது. அப்படி என்றால் எவ்வளவு பணம் வருகிறது, அதில் எவ்வளவு செலவு பண்ணுகிறோம் என்பதை எழுதி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். கணக்கு எழுதி வைக்காமல் எப்படி நமக்கு தெரியும்? கப்பல் தண்ணீரில் முழ்குவதற்கு சிறு ஓட்டை இருந்தால் போதும்.எப்படி பணம் செலவழிகிறது என்பதை கண்காணிக்க செலவு பண்ணுவதை கணக்கு எழுதி வைக்க வேண்டும்.
- சம்பளத்தில் ஒருபகுதியை சேமிக்கும்பழக்கத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள்.
- மூன்றாவதாக ஆரோக்கியத்தில் சுய ஒழுக்கமாக இருப்பது. நாம் உலகத்தில் வாழ்வதே உடல் ஆரோக்கியத்திற்காக தான். அதை விட்டுவிட்டு தண்ணீர் அடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
- சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய எந்த ஒரு உணவுப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். ஏதேனும் உடற்பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
- உறவுகளில் சுய ஒழுக்கமாய் இருப்பது என்பது ஏதாவது ஒருவரை பார்த்தவுடனேயே நம்பி பழகுவது, எல்லை மீறி பழகுவது. அவர்களை நம்பினோம் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறுவது. ஆண் பெண் உறவுகளில் விலகி இருந்து ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிக நல்லது.
- ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து கல்வி கற்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.உறவுகள் சந்தோஷம் தருகிற மாதிரி, உறவுகள் வருத்தத்தையும் தரும் என்பதை மறக்காதீர்கள்.
- . இந்த நால்வகை சுய ஒழுக்கங்கள் ஒரு மனிதன் பின்பற்றினால் அவனுக்கு வெற்றி நிச்சயம். சுய ஒழுக்கத்துடன் இறை நம்பிக்கையோடும், மனசாட்சியுடன் வாழ்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.