நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் மத நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், புவியீர்ப்பு விசை உண்டு என்று நம்பும் நாம் பிரபஞ்ச சக்தி என்ற ஒன்றை நம்பித்தான் ஆகவேண்டும்.
சக்தி ஒன்றுதான் ஆனால் அதன் வடிவங்கள் தான் பல. பல்வேறு மதங்களும் அதன் கோட்பாடுகளும் ஒன்றுக்கு பின் முரணாக இருந்தாலும் எல்லாம் வலியுறுத்துவது அன்பு என்ற ஒன்றை தான்.
நாம் நம் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை வீட்டிலிருந்தே வளர்க்கவேண்டும்.
காலையில் குழந்தைகளை எழுப்பும் போதும் நல்வார்த்தை சொல்லி எழுப்புங்கள்.
மற்ற கோப தாப சுடு சொற்களை ஒரு பத்து நிமிடம் கழித்து வைத்துக்கொள்ளுங்கள். காலை மாலை பொழுதுகளில் விளக்கேற்றி இறைவனின் துதிகளை உரக்கச் சொல்லுங்கள்.
எந்த மொழி, எந்த கடவுள் என்பது முக்கியமல்ல. திருவாசகம், கந்தசஷ்டிகவசம், பைபிள், குரான் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உணவு தயாரிக்கும் போதும், உணவைக் கட்டிக் கொடுக்கும் போதும் கோபப்படுவதை தவிர்க்கவும். முடிந்தால் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு, அன்போடு உணவை தயாரித்து கட்டி கொடுங்கள்.
உங்கள் உணர்வுகள் உணவின் மூலமாக பரிமாறப்படும். எனவே எரிச்சோடு சமையல் செய்தால் உணவு விஷமாகும், மனதைப் பாதிக்கும்.
இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு தூங்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளும் கடைபிடிக்க வையுங்கள்.
இன்று எத்தனையோ பேருக்கு உண்ண உணவு இல்லாமலும் இருக்க,இடம் இல்லாமலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு, படுக்கையில் படுத்துக் கொண்டு சுகமாக இருக்கிறோம். இப்படி சின்னஞ்சிறிய விஷயங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல பழக்கப்படுத்துங்கள்.
பாத்திரங்களை கழுவும் போது கோபம் நெரிசலால் அதிகமான ஓசையுடன் கழுவாதீர்கள். கதவுகளை ஓசையோடு திறக்கவும், மூடவும் செய்யாதீர்கள். அந்த தேவையற்ற ஒலி குடும்ப அமைதி பாதிக்கும்.
வாரத்தில் ஒரு முறையாவது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். அப்பொழுது குற்றவுணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம், உறவுகள் மேம்படும்.
வாரம் ஒரு முறை வீட்டை கழுவி சுத்தம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். வீட்டில் எப்போதும் நிறைகுடம் நீர் குறையாமல் இருக்க வேண்டும்.
நோயாளிகள் தவிர மற்றவர்கள் காலை பிரம்ம முகூர்த்த வேளையில்{ 4---6} எழுந்தால் நன்மை உண்டாகும்.
நீங்கள் கோயில் குளம் எல்லாம் அலைந்து, மலைகளை கடந்து இறைவனைத் தேட வேண்டாம். இறைவன் உங்கள் உள்ளத்தில் இருக்கிறார்.
அமைதியாக வீ ட்டில் இருந்தே தியானம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு மனசாட்சியோடு வாழ கற்றுக் கொடுங்கள். வாழ்க வளமுடன்.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.