உலகையே திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி கிரெட்டா..

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மலினா எர்மான், ஸ்வர்தே துன்பர்க் என்ற பெற்றோருக்கு 2003 ஜனவரி -ல் பிறந்தவர் க்ரெட்டா துன்பர்க். இவர் ஒரு நாள் அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு இயற்கையை அளிக்காதீர்கள் என்று போராட ஆரம்பித்தார். வாகனங்களின் புகையினாலும் அறிவியலின் வளர்ச்சியினாலும் பூமியின் பருவநிலை மாறுபாட்டை உணர்த்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளியை புறக்கணித்துவிட்டு பருவநிலை காக்க வேலைநிறுத்தம் என போராட ஆரம்பித்தார். இவர் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உணவுப் பழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது, விமான பயணத்தை தவிர்ப்பது என பலவகையிலும் புவி வெப்பமாவதை தடுக்க போராடி வருகிறார்.

இயற்கையை அழிப்பதையும், அமேசான் காட்டை அழித்ததையும் வன்மையாக எதிர்க்கிறார்.
அரசாங்கம் ஒன்றும் செய்யாது நாம்தான் போராட வேண்டும் என்று கூற மூன்று மில்லியன் பள்ளி கல்லூரி குழந்தைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உலகம் முழுவதும் போராடி வருகிறார்கள். இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த சிறிய வயதில் இந்த சிறுமியின் போராடும் தைரியத்தை உலகமே வியந்து பார்க்கிறது இயற்கையை காப்போம் அதை அழிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியுடன் வாழ்க வையகம். வாழ்க வளமுடன் .

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.