பெண்ணிற்கு தன்மானம் தேவையா?

நீ பிறந்ததும் ஆசையாசையாய் கொஞ்சினார்கள்,
நீ வளர்ந்ததும் அழகு பதுமையாய் கொண்டாடினார்கள்,
நீ பருவமடைந்ததும் குலப் பெருமையாய் குதூகலித்தனர்,
நீ படித்தும், படித்து முடிக்காமலும் மணமகளாய் ஆக்கினார்கள்,
நீ ஆசை கணவனோடு வாழ அன்போடு அனுப்பினார்கள்,
நீ பிறந்த வீட்டிலோ ராணி[ ஏழையாக இருந்தாலும்], இங்கோ பல நேரங்களில் வேலைக்காரி.
நீ கனவுகளோடு வந்தாய், ஏமாற்றம் அடைந்தாய்,
நீ வாழ்க்கையை அறியும் முன்னே குழந்தைக்கு தாயானாய்,
நீ தாய் ஆனதினால் பல துயரங்களை தாங்கினாய்,
நீ குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் ஏற்க பழகிக் கொண்டாய்,
நீ ஏற்க பழகியதால் எதிர்க்க தைரியமில்லாமல் பல நேரங்களில் ஊமையானாய்,
நீ ஊமையானதால் பல உரிமைகளை இழந்தாய்,
நீ நகையோடு வந்தாய், அதை அடகு கடையில் வைத்தாய்,
நீ குடிகார கணவனோடு அடி உதை வாங்கி கொண்டாய்.
இன்று யோசிக்கிறாய் நீ
நான் மட்டும் படித்திருந்தால்,
நான் மட்டும் வேலை பார்த்து இருந்தால்,
எனக்கு வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருந்தால்,
எனக்கு சொத்துரிமை வழங்கியிருந்தால்,
எனக்குப் பேசும் உரிமை இருந்திருந்தால்,
என் உரிமையை கேட்கும் தைரியம் எனக்கு இருந்திருந்தால்,
தன்மானத்தை அன்பால் மாற்றும் பண்பு இருந்திருந்தால்,
அன்பாய் பேசும் புத்திசாலித்தனம் எனக்கு இருந்திருந்தால்.
என்னை பொம்மையாய் வளர்க்காமல் தைரியமாய் வளர்த்திருந்தால்,
கணவனின் சம்பளத்தில் எனக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் தெரிந்திருந்தால்,
சட்டம் தெரிந்தாலும் கேட்கும் தைரியம் எனக்கு இருந்தால்,
கேட்டாலும் தரவில்லை என்றால் என் தன்மானத்தை இழந்து இருந்தால்,
கேட்டு தன்மானத்தை இழக்கவா, கேட்காமல் தன்மானத்தோடு வாழ்வதா?
பெண்ணே நீ தன்மானத்தோடு வாழ, உனக்கு ஒரு வேலை வேண்டும்.
பெண்ணின் வருமானம், அவமானம் இல்லை ஆண்களே,
அது அவளது அடையாளம். வாழ்க வளமுடன்.பெண்ணைப் பற்றி அறிய

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.