அறிவாளி ஆண்களும், புத்திசாலி பெண்களும்.
இன்று திருமணம் ஆனவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக உலகமகா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று திருமணம் ஆனவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக உலகமகா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில் தாம்பத்திய உறவு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. அதைப் பற்றி பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அதிலுள்ள அறியாமையும், அலட்சியமும் தான் பல குடும்பங்கள் இன்று கோர்ட் வாசற்படியில் நிற்க காரணம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பழமொழி உள்ளது. அறிவுள்ள ஆண், தன் மனதுக்கு பிடித்த பெண்ணிற்கு வளைந்து கொடுக்கிறோம் என்பதை அறிந்தும் அடக்குமுறையில் இறங்காமல் இருக்கிறார்.
காரணம் ஒரு நல்ல பெண்ணின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த ஒரு ஆணும் முழுமை பெறுவதில்லை. இது சகோதரியாக இருக்கலாம், தாயாக இருக்கலாம், ஒரு தோழியாக கூட இருக்கலாம்.
பெண் சக்தி இல்லை என்றால் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பது அறிவாளி ஆண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இந்த முக்கியமான உண்மையை புரிந்து கொள்ளாத ஆண் அவன் வெற்றியடைய உதவும் ஈடு இணையற்ற ஒரு சக்தியை பயன்படுத்த தவறியவனாகி விடுகிறான்.
ஆணுக்கு மிகச்சிறந்த உந்துசக்தி உள்ளம் கவர்ந்த பெண்ணை பிரம்மிக்க செய்வதுதான். நாகரீகம் தோன்றிய காலத்திற்கு முன்பு வேட்டையாடி, தனக்கு பிடித்தமான பெண்களுக்கு கொடுத்து திருப்தி அடைந்தான்.
இப்பொழுது அவளது மனதைக் கவர வகை வகையான துணிமணிகள்,கார், பங்களா என்று வாங்கி கொடுக்கிறான். இதற்கு அடிப்படைக் காரணம் பெண்களை திருப்தி படுத்தும், கவரும் ஒரு எண்ணம்தான்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வதால் பொருளாதார ரீதியில் அவர்களுடைய எதிர்பார்ப்பு இல்லை. அவர்களின் முன்னேற்றத்தில் ஆணின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பயணித்து அன்பும் அக்கறைக்கும் ஏங்குகிறார்கள்.
இந்த டெக்னாலஜி உலகத்தில் பல நன்மைகள் இருந்தாலும் அதை அதிகம் பயன்படுத்துவதால் தீமைகளும் அதிகம் ஏற்படுகிறது. இதை வைத்து ஒருவரை கண்காணிக்க முடியுமே தவிர நம்பிக்கையை உண்டாக்க முடியாது.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று ஒரு சொல் வழக்கு உண்டு. தன் கணவனின் இயல்பான பலத்தை புரிந்து கொண்டு, இங்கிதமாக அவனது எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெண், வேறு எந்தப் பெண்ணிடம் இருந்தும் போட்டி வருமோ? என்று பயப்பட தேவையில்லை.
ஒரு ஆண் மற்ற ஆண்களை ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருந்தாலும்,மனைவியால் அவனை ஆட்டுவிக்க முடியும். தன் மனைவியின் அல்லது தாயின் சொல்படி எல்லாம் தான் கேட்பதாக எந்த ஆணும் ஒப்புக்கொள்ள மாட்டான்.
ஏனெனில் வீட்டிலும் வெளியிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வலிமையானவன் என்று காட்டிக் கொள்ளும் சுபாவம் அவனது இயல்பு.
ஆண்கள் இந்த அதிகார மனநிலையை சரியாகப் புரிந்த புத்திசாலிப் பெண் இதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகிறாள். இந்த ஞானம் தெரிந்தவள் பணிவோடும் அமைதியாக இருந்து விடுவாள்.
ஒரு பெண்ணை திருப்தி படுத்த வேண்டும் என்ற ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் இந்த இயல்பு, ஒரு மனைவிக்கு கணவனை ஆக்கவும், அழிக்கவும் செய்கிறது.
இறுதியில் அறிவுள்ள ஆண்களே மனைவி எதிர்பார்ப்பதை நீங்களும்,புத்திசாலி பெண்களே கணவர் எதிர்பார்ப்பதை நீங்களும் செய்தாலே மனது திருப்தியடைந்து வாழ்க்கை இனிமையாகும். வாழ்க வளமுடன்.




படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.