·

கொரோனா தடுப்பு முறையால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் படிப்பது, பள்ளி சென்று வருவது என்று நாட்கள் கழிந்தன .
குடும்பத் தலைவிகளுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அவர்களுக்கு சாப்பாடு செய்வது என்று நேரம் சரியாக இருந்தது. பின் கணவரை அலுவலகத்துக்கு அனுப்பி சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பின் அமைதியாக வேலைகளை செய்து முடிப்பது என்று நேரம் போனது. ஆனால் இன்று குழந்தைகள், கணவர், வீட்டில் உள்ள பெரியவர்கள் என ஓய்வில்லாததால், குடும்பத் தலைவிகள் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள். 
எல்லாரும் டிவி பார்ப்பது இன்டர்நெட் போன் செல்போன் கேம்கள் என இருந்து விட்டு சாப்பாடு, ஏதாவது திண்பண்டம் செய்யச்சொல்லி அன்புத் தொல்லை தருகிறார்கள். உங்களுக்கு விடுமுறை என்றால் வீட்டிற்கு வந்து சும்மா இருக்கிறீர்கள் ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஒரு நாளும் விடுமுறை இல்லை.

அலுவலகத்திற்குச் செல்லாத நேரங்களில் இலவச வைபை இருக்கிறது என்று நேரத்தைச் செலவழிக்காமல்,

சும்மா இருக்கும் நேரங்களில் மனைவிக்கு உதவி செய்யுங்கள், குழந்தைகளை கவனியுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு இந்த நேரம் சவாலான மற்றும் சரியான நேரம்.
- ஓட்டல் சாப்பாட்டை மறந்து, ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, நம் பாரம்பரிய உணவுகளை செய்து கொடுங்கள்.
- சுத்தம், சுகாதாரம் நல்ல உணவு பழக்கங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுங்கள். தவறான உணவுப் பழக்கங்களாலும், தவறான உறவுமுறைகளாலும்,தவறான பழக்க வழக்கங்களாலும், எப்படியெல்லாம் நோய் வருகிறது,அதிலிருந்துதப்பித்துக்கொள்ள நம் முன்னோர்கள் சொன்ன வாழ்க்கை முறை, உணவு பழக்கம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க சரியான நேரமிது.

- யோகா,உடற்பயிற்சி, இறை நம்பிக்கை, நல்ல இசை கேட்பது போன்றவற்றை பழக்கப்படுத்துங்கள்.
- பாரம்பரிய விளையாட்டுகளை அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள். பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், தாயம், கிச்சு கிச்சு தாம்பலம் இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன.
- .பாரம்பரிய மருந்துகளை கொடுங்கள்.சுத்தத்தோடு மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கை ஆகவும் இருங்கள். கோரோனா வைரசை வெல்வோம். வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே நலமுடன் இருப்போம்.வாழ்க வளமுடன்.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.