நோய் எதிர்ப்பு சக்தி பெற ஆங்கில மருத்துவத்தை விட,சித்த மருத்துவம் சிறந்தது.

0






  •  ஆங்கில மருத்துவம் என்பது நோய் வந்தபின் அதற்கான சிகிச்சை அளிக்கிறது
  • ஆனால் நம் சித்த மருத்துவமும் நோய் வருமுன் காக்க வழிகளை சொல்கிறது.
  • கிருமி நாசினி வீட்டிலேயே எப்படி தயாரிக்க முடியும் என்பதைக் கூறுகிறது. வேப்பிலை 2 கைப்பிடி அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விட்டு, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் நன்றாக கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி அதைக் கை கழுவும் கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். மாலை நேரங்களில் சாம்பிராணி புகை போடுவது நல்லது.
  • வீட்டில் இருக்கும்போது சூடான தண்ணீரை குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். சுத்தமான பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். கஞ்சி வகைகள் மிக பயனுள்ளதாக இருக்கும். பெரியவர்கள் தினமும் இரண்டு அவித்த முட்டையை மிளகு, சீரகம், மஞ்சள் பொடி தூவி சாப்பிடலாம்.
  • நோய் எதிர்ப்பு சக்தி பெற தினமும் காலையில் எழுந்தவுடன் கால் தேக்கரண்டி திரிபலா சூரணத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். காலை எழுந்தவுடன் பத்மாசனத்தில் உட்கார்ந்து ஐந்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்தால் நல்லது. அது நுரையீரலுக்கு காற்று அதிகமாக செல்ல உதவும்.
  • எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து தேன் கலந்து சாப்பிடலாம்.
  • நிலவேம்பு குடிநீர் தினம் ஒரு வேளை குடிக்கலாம்
  • மேலும் கபசுர குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். கபசுர குடிநீரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய மூலிகைகளான ஆடாதொடை, அக்ரகாரம், கற்பூரவல்லி, திப்பிலி, சீந்தில், கோரைக்கிழங்கு, சிறுத் தேக்கு ,கோஸ்டம் ,நிலவேம்பு, கடுக்காய்த்தோல், லவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி என்ற 15 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி இந்த குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும்.
  • அரசு டெங்கு காய்ச்சலின் போது நிலவேம்பு கசாயத்தை வழங்கியது போல இப்பொழுது கொரோனா வைரஸிற்கும் கபசுர குடிநீர் வழங்கினால் நல்லது.
  • நம் நாட்டின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இந்த நேரத்தில் அரசுகள், நீயா, நானா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டே இருக்காமல் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப நவீன மருத்துவத்தையும், மரபுவழி சித்த பாரம்பரிய மருத்துவத்தையும் கலந்து பயன்படுத்துவது நல்லது.

  •  நம்நாட்டு சித்த மருத்துவத்தை நாமும் பயன்படுத்தி, உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு தமிழர்களின் கடமை.கொரோனா வைரசை வெல்வோம். வாழ்க நம் நாட்டு மருத்துவம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)