கொரோனாவே நீ செய்த நன்மைகள்

0
                                     கொரோனாவே நீ செய்த நன்மைகள்

  • எந்த நாட்டில் பிறந்தாலும் எல்லா நாடுகளிலும் குடியுரிமை கேட்காமலேயே குடியேறிவிட்டாய்.
  • ஜாதி, மதம், இனம் என்று பாராமல் கடந்து மனிதகுலம் ஒன்று என்று எங்களுக்கு புரிய வைத்து விட்டாய்.
  • என் கடவுள் தான் பெரியவர் மற்ற கடவுள்கள் எல்லாம் பொய் என்று கூறிய மதத் தலைவர்களையே எல்லாருக்கும் ஒரே கடவுளாக தான் இருக்க வேண்டும் என்னை யோசிக்க வைத்து விட்டாய்.
  • தனி மனித ஒழுக்கத்தையும், தனிமனித சுத்தத்தையும் எங்களுக்கு உணர்த்தி விட்டாய்.
  • அரசு அலுவலகங்கள் முதல் பழமையான கோயில்கள் வரை, நாட்டையே, ஏன் உலகத்தையே சுத்தமாக்கி விட்டாய்.

  • போக்கு வரத்து குறைந்ததால் காற்று மாசு குறைந்து காற்றை சுத்தம் ஆகிவிட்டாய்.
  • நீ கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரி. ஆனால் உலகின் பல் உயிர்களையும் உரு தெரியாமல் ஆக்கி விட்டாய். நீ பிறந்தாயா அல்லது செய்தார்களா?
  • நீ வந்ததற்கு ஒரு காரணம் உண்டல்லவா அசுத்தமான உலகத்தையும், மனித மனங்களையும் சுத்தம் ஆகிவிட்டாய்

               நீ செய்ய வேண்டிய வேலை ஒன்று பாக்கி உள்ளது.


  • உன்னை அவசர நிலையை பிரகடனப்படுத்திய உலக சுகாதார நிறுவனத்திடம்,  உன்னால் தான் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

  •  உன்னை கூறுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, சரியான உணவுப் பழக்கமும், சரியான உறவு முறைகளும் இல்லாமல் கெட்ட பழக்கங்களாலும் பல நோய்கள் வருகிறது.

  • அந்த நிறுவனத்திடம்  போய் நுரையீரல் கெட்டுப் போக நீ மட்டுமா காரணம்,நுரையீரலை கெடுக்கும்  சிகரெட்டையும், மக்களின் நல் வாழ்க்கையை பாதுகாக்க மதுபானத்தையும் ஒழித்து, இளைய சமுதாயத்தை பாதுகாக்க போதை இல்லா உலகத்தை உருவாக்க ஏதேனும் ஒரு வழி செய்துவிடு.

  •  நீ போகும் முன் இதை செய்து விடு. எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் உலக மக்களாகிய நாங்கள் உன்னிடம் கோரிக்கை வைக்கிறோம். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)