நீ எதை நினைக்கிறாயோ அதையே அடைகிறாய் என்ற விவேகானந்தரின் பொன் மொழியை என்பதை உணர்த்தும் படம், இரகசியம்

0

இரகசியம்

இந்த படத்தின் லிங்க்👇                                                                                                         

https://www.youtube.com/watch?v=xnxDloWA_5U&t=39s


என் உலக தமிழ் சொந்தங்களே,மனதாலும்,உடலாலும் தளர்ந்திருக்கும் இந்த நேரத்தில்,  த சீக்ரெட் என்ற ஆங்கில படத்தின் தமிழாக்கத்தைப் பாருங்கள்.
இந்தக் கடினமான ஊரடங்கு காலத்தில் நாம் வெளியே செல்ல முடியாமலும், மற்றவர்களிடம் பழக முடியாமலும் பல மன உளைச்சலுக்கு  ஆளாகிறோம்.
 நான் இந்த நேரத்தில் சீக்ரெட் என்னும் ஆங்கில டாக்குமெண்டரி பிலிமின் தமிழகத்தை பார்த்தேன். 
அதில் ஒருவருக்கு வாழ்க்கை கடினமாக இருப்பதற்கு யாரும் காரணம் அல்ல ,அவரே தான் காரணம் என்று புரிய வைக்கிறது. நமக்குத் தேவை என்பதை விட தேவையில்லாததை பற்றியே நாம் அதிகம் யோசிக்கிறோம் என்பதைப்பற்றி  மிகச்சரியாக புரிய வைக்கிறது.
 நாம் எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் அதுவே தான் நமக்கு வரும்.
 நாம் சந்தோஷ மனநிலையை மாற்றிக் கொண்டால் நாம் சந்தோசமாக வாழலாம் என்பதை புரிய வைத்தது .
நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறாய் என்கிற விவேகானந்தரின் வரியை  நியாபகப் படுத்தியது.

 இந்த உலகத்தில் கடவுளை நம்புவதை காட்டிலும், உங்களை நீங்கள் நம்பினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை எடுத்துக்கூறுகிறது. 
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
 மெய்வருத்தக் கூலி தரும்
 என்ற வள்ளுவரின் வாக்கை நிரூபிக்கிறது. 

உடல் மனம் புத்தி எல்லாவற்றையும் எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வைக்க முடியும் என்கிற ரகசியத்தை சொல்கிறது.

 நம்மை சுற்றி இருக்கும் இந்த பிரபஞ்ச சக்தியிடம் நாம் எதை நினைக்கிறோமோ அதைத் திரும்பத் திரும்ப நினைத்து பெற்றுக்கொள்ளும் அபூர்வ ரகசியத்தை சொல்லித் தருகிறது.

உனக்கு தேவையில்லாதது மேல் கவனம் வைக்கமல், தேவை உள்ளதின் மீது கவனத்தை வைத்து அதைக் கிடைக்க வழி சொல்கிறது.

 நாம் ஆழ் மனதோடு பேசும் கலையை கற்றுத் தருகிறது. நோயிலிருந்து விடுபட நம் மனத்தை சரி செய்தாலே போதுமென்று நிரூபிக்கிறது.

 நாம் இந்த பிரபஞ்ச சக்தியிடம் கேட்டால் அனைத்தையும் பெற, கேட்கும் சக்தியை அதிகரிக்கிறது, உலகத்தை புரியவைக்கிறது.

 இதைப் பார்த்து நீங்களும் பயன்பெற வேண்டும் பலமுறை பார்த்து வாழ்க்கையின் ரகசியத்தை வெற்றி பெறுங்கள். வாழ்க வளமுடன்.

"நீ  எதை நினைக்கிறாயோ அதையே அடைகிறாய் " என்ற உபதேசத்தின் உண்மையை உணர்த்தும் படம்.எல்லாரும் பார்த்து,வாழ்க்கையின் இரகசியத்தை  அறிந்து கொள்ளுங்கள்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)