பெற்றோர்களே, மாணவ-மாணவிகளே, தேர்வு பயத்தை எதிர்கொள்வது எப்படி?

0




முதலில் தேவை இல்லாத பயம் வேண்டாம்.

எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.

பெற்றோர்களே அவர்களை பயமுறுத்த வேண்டாம்

பொறுப்புணர்வை உணர்த்துங்கள்.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை புரிய வையுங்கள். 

நேரத்தின் அருமையை புரிய வையுங்கள்.

நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியமான உணவு இவற்றைக் கொடுங்கள்.

மாணவ மணிகளே!

உங்கள் கவனத்தை திசை திருப்பும் எந்த செயலாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

புத்தகத்தில் குறிப்பெடுத்து, அவற்றை நன்றாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

சமூகத்துக்கும், பெற்றோர்களுக்கும் பொறுப்புணர்வு உள்ளவர்களாக இருங்கள்.

பரீட்சை நேரத்தில் கவனிக்க வேண்டியவை;

பரீட்சை அறைக்கு செல்லும்வரை படிக்காமல், பத்து நிமிடத்திற்கு முன் அமைதியாக உட்காருங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.

கேள்வித்தாளை நன்றாக வாசியுங்கள்.

எதை, எப்படி எழுத வேண்டும் என யோசியுங்கள்.

முதலில் நன்றாக பதில் தெரிந்த கேள்விக்கு பதில் எழுதுங்கள்.

எழுதியதை நன்றாக சரி பாருங்கள்.

மிக முக்கியமானது தேர்வு முடிந்த பின் அதைப்பற்றி ஆலோசிப்பதை விட்டுவிடுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். 

உங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி பெறுங்கள்.

 வாழ்த்துக்கள். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)