காதல் , கல்யாணம்
உன் குணத்தோடு அவள் குணமும் ஓத்துப் போனால்
அதைப் பண்ணிக்கொள்;
அதைப் பண்ணிக்கொள்;
ஊராருக்கு அழகாய் தெரியாமல்
உன் கண்களுக்கு அழகாய் தெரிவாள்
அவளை ஏற்றுக் கொள்;
உன் லட்சியத்தை அவள் நேசிக்க
அவள் லட்சியத்தை நீ நேசிக்க நினைத்தால்
அதை நீ ஏற்றுக் கொள்;
உன் குடும்பமும்,உன் சமுதாயமும்
மகிழ்ச்சியாயிருக்குமா -என்று
ஓரே ஓரு முறை யோசித்து-நீ
திருமணம் முடித்துக் கொள்.
![]() |
உன் குணத்தோடு அவள் குணமும் ஓத்துப்போகவில்லை
என்றால் அதை பண்ணாதே;
ஊருக்கு அழகாய் தெரிந்தாலும்
உனக்கு அழகாய் தோன்றவில்லை
என்றால் அதை பண்ணாதே;
உன் லட்சியம் வேறு
அவள் லட்சியம் வேறு ஒன்று
என்றால் அதை பண்ணாதே;
உன் குடும்பமும் உன் சமுதாயமும்
மகிழ்ச்சியாயிருக்குமா-என்று
ஒரே ஒரு முறை யோசி- நீ
முடிவெடுத்துக் கொள்..........



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.