blogger உலக தமிழ் சொந்தகளே.

0
உலக தமிழ் சொந்தகளே


என் மனதில் உள்ள எண்ணங்களை சொல்ல  ஒரு நல்ல வலைதளமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிளாக்கரும்,நானும்.

பிளாகர் உடன் நான் கடந்து வந்த பாதை மிக இனிமையானது. அதை உங்களுடன் பகிர்கிறேன் முதலில் நான் யூட்யூபில் வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி என்பதைப்பற்றி பார்த்து வந்தேன். அப்பொழுது தமிழில் எழுதினால் சம்பாதிக்கலாம் ப்ளாக்கரில் எழுதினால் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

நானும் சிறுவயதில் டைரியில் எழுதியவை, மனதில் தோன்றும் எண்ணங்களையும் எழுதலாமே என்று யோசித்தேன். ஆனால் எனக்கு கம்ப்யூட்டரில் நியூ டேப் கூட ஓபன் செய்ய தெரியாது.


இந்த ப்ளாகர் ஓபன் பண்ணு பண்ணுவதற்கு என் பிள்ளைகள் தான் உதவி செய்தார்கள் முதலில் போட்டோ எடுத்து அதை பிளாக்கரில் போட்டேன்.  பின்பு தமிழ் டைப் ரைட்டிங் கம்ப்யூட்டரிலேயே கற்றுக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் டைப் அடிக்க வேண்டியிருக்கும் .

இருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையால் மனதில் உள்ள எண்ணங்களை நண்பனிடம் கூறுவதைப் போல இந்த பிளாக்கரில் எழுதுவதால் மன நிம்மதி கிடைத்தது.

ஆனாலும் எனக்கு ஒரு நண்பன் கிடைத்து விட்டதைப் போன்ற உணர்வால் மிக உத்வேகத்தோடு எழுதினேன். கொஞ்சம் கொஞ்சமாக யூடியூபில் பல வீடியோக்களை பார்த்து, போட்டோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்பது பற்றியும் அதை எப்படி பிளாக்கரில் சேர்ப்பது என்று அறிந்து கொண்டு நானாகவே செய்யக் கற்றுக் கொண்டேன். 

 இன்டர்நெட் உலகத்தில் யூடூப் பல நன்மைகள் தான் உள்ளன அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன். 

இப்பொழுது வாய்ஸ் நோட் பேடில் பேசினால் அது தமிழில் எழுத்தாக பதிவாகிவிடும் அதையே பயன்படுத்தி எழுதுகிறேன்.

என் நேரத்தை வீணாக்காமல் பிளாக்கரில் நேரம் செலவழித்தேன்.டொமைன் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். என்னிடமோ காசு இல்லை இருந்தாலும் சகோதரியிடம் கேட்டு டொமைன் வாங்கினேன்.

ஆனால் இன்னும் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைக்கவில்லை இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ப்ளாக்கர் ஒரு நண்பனைப் போல மிக நன்றாக இருக்கிறது மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல வலைத்தளமாக உள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)