என் நண்பனின் உண்மை கதை

0
பள்ளி பருவம் முடிந்து
கல்லூாியில் கால் வைத்தான்.
எதிா்கால கனவோடு
அண்ணன் கடையையும் பார்த்தான்.
கைகளில் காசு புரளவே
காலேஜிலேயே வட்டிக்கு விட்டான்.
பணம் பார்த்த ஆசையில்
படிப்பில் கோட்டை விட்டான்.
அக்காள் கணவரோடு ஐஸ்கீரீம் கம்பெனி வைத்து
அரை மனதோடு வெளியே வந்தான்.
பார்ட்னரோடு  பிஸினஸ் பண்ணி
பாதியிலேயே வெளியே வந்தான்.
அண்ணன் ஆதரிப்பான் என்று
ஆவலோடு  காத்திருந்தான்.
இருக்கிறவனுக்கு ஒரு வேலை இல்லாதவனுக்கு பல வேலை என்று
அனைவருக்காகவும்  வேலை செய்தான்.
அரியரை முடித்து மேற்படிப்பு போட்டான்-அதிலும்
அரியரையே போட்டான்.
கம்யூட்டர்  கற்றால் தான் எதிர்காலம் என எண்ணி
கற்க சென்றவன் நாட்டமின்றி வெளியே வந்தான்.
காலங்கள் ஓடியதால் கால்கட்டு போட்டால் சரியாகிடும் என்று எண்ணி
கல்யாணம்   பண்ணி வைத்தோம்.
பிள்ளைகள் இரண்டும் பெற்று குடும்பஸ்தன் ஆகிவிட்டான் -ஆனால்
இன்னும் வேலையே இல்லை.
என் விதி என் ராசி என்று
தன்னையே நொந்து கொள்கிறான்
கடைசியில் என்னிடம் சொன்னது
"இந்த பிறவியில் எனக்கு கிடைத்தது இவ்வளவுதான்
அடுத்த பிறவியிலாவது பணக்கார வீட்டில் பிறப்பேனா?"என்று. 


என் நண்பனைப் போல் எத்தனையோ இளைஞா்கள்
அம்பானி ஆக வேண்டும் என்ற
ஆசையில் கிடைத்த சிறு வேலையை மறுக்கிறாா்கள்.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"என்று நம் முன்னோர்கள்
சொன்னபடி உழைக்க வேண்டிய வயதில்
உழைக்காமல் விதியை நொந்து என்ன பயன்.
நீங்களும் ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)