அப்துல் கலாம்
அப்துல் கலாம் இறந்த செய்தி கேட்டு....
என்அணுவெல்லாம் அழுகிறது
உன்" -------------"செய்தி கேட்டு...
நீர் ஏனடா என் மனதில் நுழைந்தாய்..
அக்னிச் சிறகாய் என்னில் நுழைந்து விட்டாயே
உன் சிாிப்பு இவ்வளவு அழகா!
கடைசி நேர சிாிப்பு-இறைவனடி
சேரப் போகிறோம் என்ற மகிழ்ச்சியா-ஆனால்
எங்களுக்கு உன்னைப் போல் ஒருவன் இல்லையே...
நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட
மனிதரை நினைத்து விட்டால்-என்றாா் பாரதி.
நெஞ்சு பொறுக்கவில்லை-இந்த
கடவுளை நினைத்துவிட்டால்....
நீர் யார்
உலகமே பயந்த பொக்ரான்
அணு சோதனையை
நடத்திய தன்மான தமிழன் நீர்.
எவுகணை வைத்து
எதிரிகளை வெல்ல முடியும்
என்பதை நடத்திய மகா சக்தி நீர்.
பேப்பா் போட்டு படித்து
பள்ளி சென்ற சிறுவனா நீா்.
இராமேஷ்வரம் கோயிலை சுற்றி வந்த
இஸ்லாமியரா நீர்
எரி நட்சத்திரம்
வானத்தில் இருந்து விழுந்த எரி நட்சத்திரம்
இராமேஷ்வரம் என்ற தீவில் விழுந்த நட்சத்திரம் அது மெல்ல மெல்ல கல்வி எனும்
எவுகணையில் எறி
பள்ளி சென்று பட்டம் பெற்று
விஞ்ஞானி ஆகி
விண்ணில் ஏவுகணை ஏற்றி
உலகையே பொக்ரானில்
பயமுறுத்திய எரி நட்சத்திரம்
முதல் குடிமகன் எனும்
குடியரசு தலைவா் பதவி பெற்ற
தமிழ் தாய் மகன்
இந்த எரி நட்சத்திரம்
தன்னையே எாித்து
உலகிற்கு(இந்தியாவற்கு)
வெளிச்சம் தந்தது
எவுகணையில் எறி
பள்ளி சென்று பட்டம் பெற்று
விஞ்ஞானி ஆகி
விண்ணில் ஏவுகணை ஏற்றி
உலகையே பொக்ரானில்
பயமுறுத்திய எரி நட்சத்திரம்
முதல் குடிமகன் எனும்
குடியரசு தலைவா் பதவி பெற்ற
தமிழ் தாய் மகன்
இந்த எரி நட்சத்திரம்
தன்னையே எாித்து
உலகிற்கு(இந்தியாவற்கு)
வெளிச்சம் தந்தது
வல்லரசு கனவு
இளைஞர்களின்முன்னோடி நீங்கள் தான்
மாணவா்கள் தான் எதிா் கால
இந்தியாவை வல்லரசு ஆக்க முடியும்
என்பதை நன்றாக உணர்ந்தவா் நீங்கள்
மாணவா்கள் மத்தியிலேயே
மண்ணில் சாய்ந்து விட்டீா்களோ
அன்று விழுந்த எரி நட்சத்தரம்
இன்று செயலிழந்து விட்டதோ?
அந்த நட்சத்திரத்தின் பொறியின்
தாக்கத்தில்இன்னும்
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவு போகாது
உங்கள் கனவு கலையாது
இந்தியா வல்லரசாக மட்டுமல்ல
நல்லரசாகவும் மாற உம் பாதை
எங்களுக்கு வழிகாட்டி
உங்கள் நட்சத்திர வெளிச்சத்தில்
எளிமை;
நோ்மை;
நேரம் தவறாமை;
சுயக்கட்டுப்பாடு;
ஆன்மீக நெறி;
தன்னம்பிக்கை இந்த பண்புகளால்
எங்கள் பயணம் தொடரும்
உங்கள் கனவு நிஜமாகும்.
உங்கள் கனவு கலையாது
இந்தியா வல்லரசாக மட்டுமல்ல
நல்லரசாகவும் மாற உம் பாதை
எங்களுக்கு வழிகாட்டி
உங்கள் நட்சத்திர வெளிச்சத்தில்
எளிமை;
நோ்மை;
நேரம் தவறாமை;
சுயக்கட்டுப்பாடு;
ஆன்மீக நெறி;
தன்னம்பிக்கை இந்த பண்புகளால்
எங்கள் பயணம் தொடரும்
உங்கள் கனவு நிஜமாகும்.


படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.