காவலன்
காலை எழும் முன்பே
அதிகாாியின் அழைப்பு அலைபேசியில்
அவசர அவசரமாக காலைக் கடனை
முடித்தும் முடிக்காமலும்
முகச் சவரம் தினம் செய்து
குளித்து காபி மட்டும் குடித்து
ஓடோடி ரோல்காலுக்கு செல்வான்.
அதிகாாியின் கட்டளைகளை கேட்டு
அவசரமாக பணிக்கு செல்வான்
காலை உணவிற்கு வீட்டிற்கு செல்ல முடியாமல்
ஓட்டலுக்கு சாப்பிட சென்றவனை
அங்கே கலவரம் ,இங்கே போராட்டம் என
அழைத்ததும் போவான்.
இடை இடையே காபி, சிகரெட்
இது தான் அவன் காலை உணவு.
மதியமாவது வீட்டில் சாப்பிடலாமென்று
அவசரமாக புறப்பட்டவனை
ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டாா்கள் போஸ்ட்மாடத்திற்கு
பின் வீட்டிற்கு வந்தான் குவாா்டரோடு
மனைவியின் ஏச்சோடு
மதியம் சோறு சாப்பிட்டான்.
சிறிது ஓய்வெடுக்கலாமென்று
தலை சாய்த்தவனை
அலைபேசி அழைத்து சொன்னாா்கள்
இன்று உனக்கு,நைட் ரௌன்ட்ஸ் என்று.
அவன் மனைவி சொன்னாள்,
"உன்னை கட்டியதற்கு ஒரு கூலி வேலை
பாா்பவனை கட்டியிருக்கலாமென்று;"
நானும் நினைத்தேன்;
"இந்த வேலை பாா்பதற்கு ஒரு கூலி வேலை
பாா்த்திருக்கலாமென்று"
"நிம்மதியான தூக்கம்,
வீட்டுச்சாப்பாடு,
அலைபேசியின் தொந்தரவு இல்லாமல்
நானும் நல்லவனாய்
நல்ல குடும்ப தலைவனாய்
இருந்திருப்பேன் என்று."
நாங்கள் கௌரவ அரசாங்க அடிமைகள்.


படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.