செல்ல பூனையும், சுகப்பிரசவமும்.

0



செல்ல பூனையும், சுகப்பிரசவமும்



முதலில் என் வீட்டிற்கு வந்தபோது வெறுத்தேன்

பின்பு அதன் அழகைப் பார்த்து ஆசைப்பட்டேன்

அறிவைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்


வீட்டிற்குள்ளேயே வெளியே போனதால் அருவருப்பு பட்டேன்

சிறிது நாள் கழித்து கீழே போக பழக்கி விட்டேன் 

அதையே பழக்கமாக்கி கொண்டது என் செல்ல பூனை.


கொஞ்சம் பாலும் சில நாட்களில் மீனும் அதற்கு சாப்பாடு.

 மீன் தலையை போட்டி போட்டு சாப்பிட்டு காலையிலேயே

 பாலுக்காக காலை சுற்றிக்கொண்டே சிணுங்கும்.


என் தங்கை மகளை எலி கடித்ததால்,  இந்த பூனை வீட்டுக்கு வந்தது

எலித்தொல்லை போய் பூனை தொல்லை என்று எரிச்சல் பட்டேன்.

சில நாட்கள் காணாமல் போய்விட்டது


 எங்கே போய்விட்டது  என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது,

 சில நாட்கள் கழித்துதானாகவே திரும்பி வந்தது

 வந்ததில் இருந்து ஒரே கத்தல் வெயிலிலும் உருண்டது

 

என்ன செய்கிறது என்று சொல்லத் தெரியாத வாயில்லா ஜீவன்,

 என் மகன் குளிப்பாட்டினாள் முன்பெல்லாம் குளிப்பாட்டும்போது  

ஓடும் பூனை  அன்று அழகாய் குளித்தது 

அதன் சூடு என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்.


 பின்பு தான் தெரிந்தது அது ஒரு பெண் பூனை என்றும்

 அதற்கு வயிற்றுவலி இருக்குமோ என்று தோன்றியது

 சிறிது நாட்களில் அதன் வயிறு கொஞ்சம் பெரிதாகவே

 வயிற்றில் குட்டி இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது

 

ஆனாலும் ஏதோ ஒரு சந்தோசம் நானும் 

ஒரு பெண்ணானதால் சந்தோசப்பட்டேன்.

அதுவும் நன்றாக வளர்ந்தது வயிற்றிலுள்ள குட்டிகளோடு 

இரண்டு மூன்று மாதங்கள்  ஓடியது.


நேற்று காலையிலிருந்து ஒரே கத்தல் கதறல் ஒரே சத்தம்

 என்னவெல்லாம் பேசலாம் என்று தோன்றுகிறதோ 

அதற்கு தெரியவில்லை  குட்டி போட இடம் தேடி அலைந்தது

என் பிரசவ வேதனையை நியாபக படுத்தியது.


 தனக்கு பிரசவ நேரம் என்பதை உணர்ந்து கொண்டு 

பீரோவை நோக்கி போகிறது அதிலிருந்து அடித்து விரட்டி விட்டோம் 

ஒரு காலி தண்ணீர் தொட்டியில் துணி போட்டு வைத்து வைத்தாலும் 

அதற்கு உள்ளே போகும், ஆனால் வெளியே வரும்.


 பின்பு எங்கள் வீட்டில் கப்போர்டில் ஒரு இடம் தேடி 

அந்த இடம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது 

அட்டைப் பெட்டிக்குள் துணி போட்டு வைத்தால் 

நாங்கள் காட்டிய இடத்தில் அது படுக்கவில்லை 


கப்போர்டில் தான் ஒரு இடம் வேண்டும் என்று 

ஒரே அதன் முன்னே நின்று கத்தியது, 

கபோர்டை ஒதுங்க வைத்து

 கொடுத்தவுடன் கொஞ்சம் அமைதியாக இருந்தது


 ஆனால் அதன்  வலி  என்னவோ அதை உட்கார முடியவில்லை.

 இருக்கவும் முடியவில்லை நடக்கிறது, படுக்கிறது, உருள்கிறது,  நெளிகிறது. 

என் மடியில் ஒளிந்து கொள்கிறது. என்னை வேலை செய்யாமல் 

அதை மடியிலேயே வைக்கச் சொல்கிறது பயமோ என்னவோ..


 எல்லா பெண்களும்  பிரசவத்திற்கு தாய் வீட்டுக்குப் போகிற மாதிரி

 இதுவும் போய் இருந்தால் என்ன என்று எனக்கு தோன்றியது

 நாம் அல்லவா தாயிடமிருந்து கூப்பிட்டு வந்தோம் என்று வருத்தப்பட்டேன்

 பின் அந்த கப்போர்டில் போட்டுவிட்டு பூட்டி விட்டு தூங்கி விட்டோம்


 மறுநாள் காலையில் மூன்று குட்டிகளோடு தாயும் சேயும் நலமாக இருந்தது

 அதற்கு பிரசவம் பார்த்தது யார்?  சுகப்பிரசவம் ஆனால்

 தனியாக பிரசவத்தை தானே நடத்தியத்தியதா?


 இயற்கை பார்த்து நடத்தியத்தியதா? 

இன்று பிரசவத்திற்காக ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலையும்

 நம்மை போல் எத்தனையோ பெண்களை நாம் பார்த்திருக்கிறோம்



 எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்று 

தன் குட்டியின்  பாதுகாப்பிற்காகவும் அதன் முடிவெடுக்கும் திறமையை

 பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன் இதற்கு  ஐந்தறிவா என்று.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)