தாங்க முடியாத பிரச்சனையா? நான் மீண்டு வந்தது எப்படி என்ற அனுபவத்தைச் சொல்கிறேன்.

0




 இன்று பல பெண்கள் நமக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை என்று புலம்புகிறார்கள்.

கணவர் இப்படி சொல்லி விட்டாரே,நான் நினைத்த மாதிரி இவர் நடந்து கொள்ள மாட்டேன்  என்கிறாரே எனத் துக்கப் படுகிறார்கள்

மாமியார் இப்படி சொல்லி இருக்க கூடாது என்று ஆதங்க படுகிறார்கள்.

அடுத்தவர்கள் சொன்னதை நினைத்து  நினைத்து வாழ்க்கை வாழ தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

பிள்ளைகளிடம் அதிகமாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து  வாழ்க்கையை நொந்து  கொள்கிறார்கள் 

எந்தப் பிரச்சனை என்றாலும் மூன்று தீர்வுகளை புத்தர் சொல்லியிருக்கிறார், அதை நான் என் வாழ்க்கையில் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறேன்


ஒரு பிரச்சனையை நடந்து விட்டது என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். 

 

ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் மாற்ற முயற்சி செய்யுங்கள்.


 மாற்றவும் முடியவில்லை என்றால் அதை விட்டு விடுங்கள். 


நீங்கள் விட்டு விட்டால் அது தானாகவே சரியாகிவிடும் என்று கூறுகிறார்.



புத்தர் ஒருமுறை தன் சீடனிடம் ஆற்றங்கரையில் சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறினார்

 சீடன் சென்றபோது அப்போதுதான் மாட்டுவண்டி சென்றதால் தண்ணீர் கலங்கி இருப்பதாக கூறினார்

 சிறிது நேரம் கழித்து இப்பொழுது போய் தண்ணீர் எடுத்து வா என்று கூறினார் சீடரும் சென்றார்.

 தண்ணீர் தெளியாமல்  கலங்கி இருக்கவே தண்ணீர் எடுக்க முடியவில்லை எனக் கூறினார் 

சிறிது நேரம் கழித்து சென்று சீடன் தண்ணீர் தெளிவாக இருந்ததால் இப்போது தண்ணீர் எடுத்து வந்தார்

 உடனே புத்தர் தன் சீடரிடம் கலங்கிய தண்ணீர் தெளிய நீ என்ன செய்தாய்?  என்று கேட்டார்.

 அதற்கு சீடன் நான் ஒன்றுமே செய்யவில்லை சும்மாயிருந்தேன் எனக் கூறினார்.

 எனவே மனம் குழம்பிய நிலையில் நாம் ஒரே ஒரு செயலை செய்யாமல் விட்டு விடுவதே சரியானது எனக் கூறி அறிவுரை வழங்கினார்.

எந்த பிரச்சனை என்றாலும் அதை நீங்கள் விட்டு விட்டால் அது தானாகவே சரியாகி விடும். வாழ்க வளமுடன்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)