யார் இந்த ரேகா பத்மநாபன். சின்னத்திரை நாடக நடிகையாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரேகா, தன் தோழி சபர்ணாவின் தற்கொலை மரணம் அவளை மிகவும் பாதித்தது. அவள் தற்கொலை செய்ய என்ன காரணம் என்று யோசித்து பின் யூ ட்யூபில் லைவ் போடுகிறார்.
தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து, நாம் தற்கொலை செய்தால் என்ன நிலைமை என்று யோசித்தால் அதில் இருந்து மீள ஒரு வழி கிடைக்கும் என்று அவர் சொல்கிறார்.
மனம் பற்றிய புரிதலையும், புத்தகங்கள் பற்றியும்,புத்தகங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மனத் தெளிவையும் பகிர்ந்து கொள்கிறார்.
சமூக வலைத்தளங்களால் இளம் வயதினர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகின்றனர்.அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தான் கற்றுக்கொண்ட புத்தகங்களின் வழியாகவும், சித்தர்களின் ஆலோசனைகளையும் ஆன்மிக கருத்துக்களை எளிமையாக புரியும் வழியில் சொல்கிறார்.
பள்ளி மாணவர்களிடையே பாலியல் சார்ந்த குற்றங்கள் நடக்காமல் இருக்க அது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் மனம் பற்றிய தெளிவான புரிதலையும், மூச்சை கவனிப்பதன் மூலமாக நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.
எது காதல் ,எது காமம் என்பதை இளம் வயதினர் புரியும் வகையில் தெளிவு படுத்துகிறார்.இரமண மகரிசி அருளிய நான் யார் என்ற புத்தகத்தின் விளக்கத்தை யூ டியூபில் பார்த்து பயனடைவோம்.
https://www.youtube.com/watch?v=tgzdWz1Uy7s
இவரது வீடியோக்களை பார்த்து நாமும், நம் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பார்த்து மனத்தெளிவை பெற்று மற்றவர்களுக்கும் பயன் பெறும் படி செய்வோம். வாழ்க வளமுடன்.
◦


படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.