பயம் நல்லதா,கெட்டதா?

0

  பயம் நல்லதுதான்,                   பயம் உங்களை இயல்பாக தீங்கிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நீங்கள் ஆபத்தான ஒன்று செய்யப்போகிறார்கள் என்றுஅடையாளம் காண பயம் உதவுகிறது. மேலும் பாதுகாப்பான தேர்வு செய்ய பயம் உதவும்.

தெனாலிராமன் படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் பயப்படுவது நல்லதல்ல. 

ஆனால் உங்கள் பயம் உங்கள் கனவை தடுப்பதை போல நீங்கள் உணர்ந்தால், உங்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை உருவாக்குகிறது என்று நீங்கள் அறிந்தால்,உங்கள் பயத்தை எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு பேச்சாளர் கைக்குட்டையால் நெற்றியை துடிப்பதை பார்த்து இருப்போம் அதுவும் ஒருவகை பயம் தான்.

அதற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி முறையான பயிற்சியை மேற்கொண்டால் உங்கள் பயத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

உங்கள் அன்றாட வாழ்க்கையின் உங்கள் பயத்தை எதிர்கொள்ள வேண்டியது அவசியமா என்பதை நீங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

சில நேரங்களில் நீங்கள் பயப்படுவது,அவ்விஷயத்தைப் பற்றி தெரியாமல் இருப்பதால்தான் பயம் வருகிறது.

உதாரணமாக விமானத்தைப் பற்றி பயப்படலாம் என்றால் காயம் அல்லது மரணம் என்று, பல விமான ஆபத்து விபத்து சம்பவங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆனால் புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் இறப்பு விகதம் 7 மில்லியனில் 1, என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

புகை பிடிக்கும் பழக்கத்தில் இறப்பு விகிதம் 600 ல் 1, இதை ஒப்பிடுகையில் அது மிகவும் குறைவு.

ஒரு விமான விபத்தின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இவற்றைப் பார்க்கும்போது தான் ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

ஆனால் மற்றவர்கள் சாதாரணமாக விமானத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போவதை பற்றியும், வெற்றிகரமாக அங்கு வேலை செய்வதைப் பற்றியும் குறிப்பிடும்போது உங்களுக்கு தைரியம் ஏற்படலாம். 

ஏதாவது பயமாக இருந்தால் அது உண்மையில் ஆபத்தானது என்று அர்த்தமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களை பயமுறுத்தும் காரியங்களை நீங்கள் செய்வதன் மூலமாக அதில் உள்ள உண்மைகள் , அபாயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஒரு மேடைப் பேச்சாளராக இருந்தால் பயத்தை போக்கி தைரியமாக பேசுவது பற்றி சிறு பயிற்சிகள்.

ஒரு கண்ணாடியின் முன் நின்று இரண்டு நிமிடம் பேசுங்கள்,

நீங்கள் பேசியதே பதிவு செய்து திருப்பிப் போட்டுக் கேளுங்கள்,

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னால் பேச்சு பயிற்சி செய்யுங்கள், மனைவி ,பிள்ளைகள் முன்பு பேசிப்பாருங்கள்.

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பேசிப்பாருங்கள்,

பயிற்சி செய்ய உங்களை பயமுறுத்தும் காரியத்தை நீங்கள் உண்மையில் செய்ய முடியாவிட்டாலும், நீங்கள் கற்பனையில் பேசுவது போல பேசிப்பாருங்கள்.

விமானத்தில் பயணம் செய்வதைப் போல கற்பனை செய்யுங்கள்

நீங்கள் இருக்கையில் உட்காரும் போது, விமானம் புறப்படும்போது அதை எப்படிக் கையாளுவீர்கள் என்பது பற்றி சிந்தியுங்கள்.

இந்தக் கற்பனை செய்யும் பழக்கம் காலப்போக்கில் உங்கள் பயத்தை தணிக்க உதவும்.

 நான் ஒரு பத்திரிகையில் படித்தேன், இரண்டு மணி நேரத்தில் மரணதண்டனையை சந்திக்கப்போகும் எட்டு பேரில் ஒருவர், மிகவும் சந்தோசமான மனநிலையில் இருந்தார்.

அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது,

' இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் பிரியப் போகும் போது, உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது?' என்று .

அதற்கு அவர் சொன்ன பதில்,' நான் நல்லா இருக்கிறேன், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், என் கஷ்டம் எல்லாம் முடியப்போகிறது, என் வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதையும் அனுபவித்ததில்லை.

நல்ல சாப்பாடு ,நல்ல துணிமணி இவற்றிற்கே நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நான் சாகப் போகிறது நிஜம் என்று தெரிந்தவுடன் நான் மிக சந்தோசமாக நாட்களைக் கழித்தேன். நல்ல மனதோடு என் மனசை தயார் படுத்திக்கொண்டேன்' என்றார்.

  மரண தண்டனைக்கு முன்பு அவருக்கு உணவு கொடுத்தார்கள், மூன்று பேர் சாப்பிடுகிற அளவிற்கு நன்றாக சாப்பிட்டார். அவருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை என்பதுபோல ஒவ்வொரு கவளையும் ருசித்து சாப்பிட்டார். 

தீர்மானம்தான் இப்படிப்பட்ட சகிப்புத்தன்மையையும், பக்குவத்தையும் அவருக்கு கொடுத்திருந்தது.

நாம் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் பயம் ஏற்படும்போது அதற்கு அடிபணியாமல் தீர்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்போம். தைரியத்தோடு வாழ்வோம்; வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)